சினிமா செய்திகள்

ஸ்ரேயாவின் ரகசிய திருமண புகைப்படம் வெளியானது + "||" + Shreya's secret wedding photo was released

ஸ்ரேயாவின் ரகசிய திருமண புகைப்படம் வெளியானது

ஸ்ரேயாவின் ரகசிய திருமண புகைப்படம் வெளியானது
ஸ்ரேயாவின் ரகசிய திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஸ்ரேயா. சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார். கந்தசாமி, அழகிய தமிழ்மகன், திருவிளையாடல் ஆரம்பம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். நடிகை ஸ்ரேயா, ரஷியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோச்செவ்வை காதலிப்பதாக தகவல் வெளியானது.

இதனை ஸ்ரேயா உறுதிபடுத்தவில்லை. இப்போது திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று கூறி வந்தார். இந்த நிலையில் ஸ்ரேயாவுக்கும், ஆண்ட்ரேவுக்கும் உதய்பூரில் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் ஸ்ரேயா ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை ஸ்ரேயா வெளியிடாமல் இருந்தார்.

ஸ்ரேயா திருமணத்தில் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை என்றும், ரஷிய காதலரை மணப்பதை அவரது அம்மா கடுமையாக எதிர்த்து வந்தார் என்றும், எனவேதான் யாருக்கும் சொல்லாமல் காதலரை மணந்துகொண்டார் என்றும் கிசுகிசுக்கள் பரவி வந்தன.

திருமண படம் வெளியாகாததால் அவரது திருமணத்தை உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது. இந்த நிலையில் ஸ்ரேயாவும் ரஷிய காதலரும் மாலையும் கழுத்துமாய் நிற்பது போன்ற திருமண படம் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதைப் பார்த்து பலரும் ஸ்ரேயாவுக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துகள் பதிவிட்டார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...