சினிமா செய்திகள்

ஸ்டெர்லைட் போராட்டம்:நடிகர்கள் விவேக், ஜி.வி.பிரகாஷ் ஆதரவு + "||" + Sterlite Struggle: Supported by actors Vivek and GV Prakash

ஸ்டெர்லைட் போராட்டம்:நடிகர்கள் விவேக், ஜி.வி.பிரகாஷ் ஆதரவு

ஸ்டெர்லைட் போராட்டம்:நடிகர்கள் விவேக், ஜி.வி.பிரகாஷ் ஆதரவு
ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு நடிகர்கள் விவேக், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டம் தீவிரமாகி வருகிறது. பொதுமக்களும், மாணவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தார்.

தற்போது நடிகர்கள் விவேக், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஸ்டெர்லைட் பற்றி படிக்க அதிர்ச்சியாக உள்ளது. எவ்வளவு உயிர் கொல்லி நச்சுக்கழிவுகள் மண்ணிலும் நீரிலும் இதுவரை கலந்தனவோ தெரியவில்லையே. அரசு கருணை மனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். அது முத்து நகர். மூச்சு திணறும் நகர் அல்ல” என்று கூறியுள்ளார்.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், “நடந்து முடிந்த பின்னால் எதையும் தடுக்க முடியாது. இதை உணர மறுத்தால் விபரீத பொறுப்புகளுக்கு யார் பொறுப்பு? மக்களே அரசு. மக்களுக்காகவே அரசு” என்று கருத்து பதிவிட்டு உள்ளார். 

ஆசிரியரின் தேர்வுகள்...