சினிமா செய்திகள்

கொள்ளையர்களை வேட்டையாடும் ‘டெத் விஷ்’ + "||" + Hunt the robbers 'Death Wish'

கொள்ளையர்களை வேட்டையாடும் ‘டெத் விஷ்’

கொள்ளையர்களை  வேட்டையாடும் ‘டெத் விஷ்’
சினிமா தயாரிப்பாளர்கள் பிரச்சினை, தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டம்... என பல பிரச்சினைகளால், சினிமா தியோட்டர்களுக்கு சில நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
 தமிழ் சினிமாக்கள் மட்டுமின்றி, ஹாலிவுட் சினிமாக்களும் தமிழகத்தில்  அந்த இடைவெளியில் வெளியாகவில்லை. குறிப்பாக ஹாலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டெத் விஷ்’ திரைப்படம், ஒரேடியாக மறக்கடிக்கப்பட்டது. ஆக்‌ஷன் நாயகன் ப்ரூஸ் வில்ஸ், குடும்பக் கதையில் நடித்திருந்ததால் அந்தப் படத்தின் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. அதன் கதை சுருக்கம் இதோ...


அன்பான மனைவி (எலிசபெத் ஷ்யூ), அழகான மகள் (கேமிலா மோரான்) ஆகியோருடன் மிகவும் சந்தோ‌ஷமாக வாழ்கிறார், டாக்டரான ப்ரூஸ் வில்ஸ். ஒருபுறம் அவர் அமைதியாக வாழ்ந்தாலும், மறுபுறம் ஒரு பயங்கரமான கொள்ளைக் கும்பல், ஆண்கள் இல்லாத வீடுகளில் புகுந்து கொள்ளை, கொலை என தாண்டவமாடுகிறது. ஒருநாள் ப்ரூஸ் வில்ஸ் வீட்டில் இல்லாத நேரத்தில், அவர் வீட்டுக்குள்ளும் இந்தக் கும்பல் புகுந்து விடுகிறது. வீட்டில் இருக்கும் நகை, பணம் அனைத்தையும் அள்ளிக்கொடுத்தும் திருப்தி அடையாத கும்பல், ப்ரூஸ் வில்சினுடைய மனைவியைக் கொல்கிறது. தாயைக் காப்பாற்றச் சென்ற கேமிலாவைக் கும்பல் தாக்கியதில் அடிபட்டு, கோமா நிலைக்குச் சென்று விடுகிறாள். வழக்கமான போலீஸ் சம்பிரதாயங்கள் ஒருபுறம் நடந்தாலும், ப்ரூஸ் வில்ஸ் ஆபரே‌ஷன் தியேட்டரை மறந்து விட்டு ஆக்‌ஷன் களத்தில் இறங்குகிறார்.

தனது குடும்பத்தை நாசமாக்கியவன் யார் என்று தெரியாமல், கண்ணில் படும் கொள்ளையர்களை எல்லாம் சுட்டுத்தள்ளுகிறார். கடைசியாக தன்னுடைய குடும் பத்தை நாசமாக்கியவர்களைப் பற்றி அவருக்குத் தெரியவருகிறது. அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருக் கிறார்கள். தனியொருவனாக அவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதே மீதி கதை.

டைஹார்ட், ரெட், தி சிக்ஸ் சென்ஸ், ஹாஸ்டேஜ் ஆகிய படங்களில் ஆக்‌ஷனில் அதகளம் செய்த ப்ரூஸ் வில்ஸ், இதில் ஆக்‌ஷனுடன் சென்டிமென்ட்டிலும் கலக்கியிருக்கிறார். ஆனால், அவரது முந்தைய படங்களை ஒப்பிடும்போது, இதில் ஆக்‌ஷன் குறைவுதான். என்றாலும், தமிழ்ப் படங்களின் பாணியில் ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வைத் தருகிறார், இயக்குனர் எலி ரோத்.