சினிமா செய்திகள்

நஸ்ரியா தயாரிப்பாளர் ஆகிறார்!கணவரை வைத்து படம் தயாரிக்கிறார் + "||" + Nasria is the producer!

நஸ்ரியா தயாரிப்பாளர் ஆகிறார்!கணவரை வைத்து படம் தயாரிக்கிறார்

நஸ்ரியா தயாரிப்பாளர் ஆகிறார்!கணவரை வைத்து படம் தயாரிக்கிறார்
பிரபல கதாநாயகி நஸ்ரியா அவர் ஒரு படத்தை தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தவர், நஸ்ரியா. இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றன. பிரபல கதாநாயகியாக திகழ்ந்த நஸ்ரியா, புகழின் உச்சத்தில் இருந்தபோது, மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். பஹத் பாசில், பிரபல டைரக்டர் பாசில் மகன் ஆவார்.

திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா, “இனிமேல் நடிக்க மாட்டேன்” என்று அறிவித்தார். அதன்படி, அவர் நடிப்பதை விட்டு விட்டு, சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில், அவர் ஒரு மலையாள படத்தை தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கணவர் பஹத் பாசில் நடிக்கும் ‘அயூப்பின்டே புத்தகம்’ என்ற மலையாள படத்தை நஸ்ரியா தயாரிக்கிறார். இந்த படத்தை அமல் நீரத் டைரக்டு செய்கிறார். இவர், துல்கர் சல்மான் நடித்த ‘காம்ரேட் இன் அமெரிக்கா’ என்ற மலையாள படத்தை இயக்கியவர். 

ஆசிரியரின் தேர்வுகள்...