சினிமா செய்திகள்

நடிகை கிம்சர்மா மீது போலீசில் புகார் + "||" + Actress Kimsarma on the police complaint

நடிகை கிம்சர்மா மீது போலீசில் புகார்

நடிகை கிம்சர்மா மீது போலீசில் புகார்
நடிகை கிம்சர்மா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகை கிம்சர்மா மீது ராஜஸ்தான் தொழில் அதிபர் திலீப் குமார் தனது ஆடம்பர சொகுசு காரை அபகரித்து விட்டதாக மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். கிம்சர்மா வீட்டில் தனது காரை நிறுத்தி வைத்து இருந்ததாகவும் அதை அவர் அபகரித்து பயன்படுத்தி வருவதாகவும் காரை மீட்டு தரும்படியும் புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.


முதலில் கிம்சர்மா கணவர் அலிபுஞ்சானி மீது கார் அபகரிப்பு புகாரை அவர் தெரிவித்து இருந்தார். தற்போது அவர் பெயரை தவறாக கூறிவிட்டதாகவும் கிம்சர்மாதான் எனது காரை அபகரித்து வைத்து இருக்கிறார் என்றும் போலீசில் புதிய புகார் அளித்து இருக்கிறார். கிம்சர்மாவுக்கும் அவரது கணவருக்கும் கார் தஜ்தாவேஜுகளுடன் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கிம்சர்மா தற்போது வெளியூரில் இருப்பதாகவும் மும்பை திரும்பியதும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.