சினிமா செய்திகள்

டைரக்டர்கள் வெங்கட் பிரபு - பாண்டிராஜ் மோதல் + "||" + Directors Venkat Prabhu - Pandiraj conflict

டைரக்டர்கள் வெங்கட் பிரபு - பாண்டிராஜ் மோதல்

டைரக்டர்கள் வெங்கட் பிரபு - பாண்டிராஜ் மோதல்
டைரக்டர்கள் வெங்கட் பிரபு மற்றும் பாண்டிராஜ் டுவிட்டரில் மோதிக்கொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அரசியல் கட்சியினரும் மாணவர் அமைப்புகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராக சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டு ஏராளமானோர் கைதானார்கள்.

போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதலும், தடியடி சம்பவங்களும் நடந்தன. எதிர்ப்பை மீறி ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து டைரக்டர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் ஒன்றும் சொல்லலப்பா” என்று கருத்து பதிவிட்டு இருந்தார்.

ஏதேனும் சொன்னால் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வரும் என்பதால் அதை தவிர்ப்பதற்காக இப்படி அவர் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக வெங்கட் பிரபுவை டைரக்டர் பாண்டிராஜ் கண்டித்துள்ளார்.

பாண்டிராஜ் தனது, டுவிட்டரில், “உண்மையான விவசாயி யாரும் ஐ.பி.எல். பார்க்க கூடாது என்றோ, எல்லோரும் எங்களுக்கு போராடுங்கள் என்றோ சொல்ல மாட்டார்கள். நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் விவசாயம் செய்து கொண்டிருப்பார்கள் நாம் சாப்பிடுவதற்கு, அதுதான் விவசாயி. அந்த வலி புரிந்தவர்கள் போராடுகிறார்கள். புரியாதவர்கள்... போராட்டங்களில் நிறைய பேரிடம் பொதுநலமின்றி சுயநலமே தெரிகிறது. தயவு செய்து அரிசியிலும் அரசியல் பண்ணாதீர்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுபவன் விவசாயி. வெங்கட் பிரபு சார், சென்னை சூப்பர் கிங்ஸ்சை ரசியுங்கள். அது உங்கள் உரிமை. தயவு செய்து விவசாயிகளை வைத்து காமெடி பண்ணாதீர்கள்” என்று கருத்து பதிவிட்டு உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...