சினிமா செய்திகள்

மகள் வயது பெண்ணுடன் திருமணம் நடிகர் என்ன சொல்கிறார்? + "||" + Before Ankita Konwar, these women were Milind Soman's lovers

மகள் வயது பெண்ணுடன் திருமணம் நடிகர் என்ன சொல்கிறார்?

மகள் வயது பெண்ணுடன் திருமணம் நடிகர் என்ன சொல்கிறார்?
நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன், மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். #MilindSoman
மும்பை

தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில், சரத்குமார் -ஜோதிகா நடிப்பில் வந்த 'பச்சைக் கிளி முத்துச்சரம்' என்கிற படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன். 52 வயதாகும் மிலிந்த் சோமன், மகள் வயது உள்ள அங்கிதா என்கிற 26 வயது இளம் பெண்ணை இந்த மாத இறுதியில் காதல் திருமணம் செய்யப் போகிறார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை வெறுப்பேற்றியிருக்கிறார்.  இந்நிலையில், சென்னையை சேர்ந்த அந்தப் பெண்ணுடன் காதல் மலர்ந்த கதையை நடிகர் மிலிந்த் சோமன் கூறியிருக்கிறார். 

"மகள் வயது பெண்ணுடன் காதல், திருமணமா? என்கிறார்கள். எனக்கு மற்றவர்கள் பேசுவதை பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு எங்களின் காதல் பற்றி எதுவும் தெரியாது!

நான் அங்கிதாவை முதல்முறையாக பார்த்தது சென்னையில் உள்ள நைட்கிளப்பில் தான்! பார்த்த உடனே அங்கிதாவை பிடித்துப்போய் எனது செல்போன் எண்ணை கொடுத்தேன். வழக்கமாக நைட் கிளப் போகும் பழக்கம் இல்லாத அங்கிதா, அன்று அங்கு வந்தது எனக்காகத் தான் என நினைக்கிறேன். அவர் அங்கு வந்தது நல்லதாகிவிட்டது.

நான் நம்பர் கொடுத்த மறுநாளே அங்கிதா கால் செய்து பேசினார். அப்புறம் தினமும் பேச ஆரம்பித்தார். நான் பேச, அவள் பேச, அப்படியே பேசிப் பேசி நட்பாகி, பிறகு அது காதலானது! 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து காதலித்து வருகிறோம்.

யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை, நான் அங்கிதாவை திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார். 

பிரெஞ்சு நடிகையான மைலீன் ஜம்பனோனி விவாகரத்து பெற்ற பிறகு இது மிலிந்துக்கு  இரண்டாவது திருமணம் ஆகும். மிலிந்தின் வாழ்க்கையில் பல பெண்கள் இருந்திருக்கிறார்கள். சில வதந்திகள் மற்றும் சில நேரம் அல்லது வேறு சில சமயங்களில் அவரது தோழிகளாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது.

முதன் முதலில் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்ட உறவு மது சப்ரேவுடன் இருந்தது.மகாராஷ்டிராவின் மாடலான மது சப்ரே 1992 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இரண்டாவது ரன்னர்-அப் முடிசூட்டப்பட்டவர்.இந்தியாவின் பிரபல மாடலாக இருந்தார். மிலிந்தும், மது சப்ரேவ்வும் இணைந்து பல விளம்பரங்களூக்கு மாடல்களாக இருந்து உள்ளனர்.

இதன் பின் பிரெஞ்சு நடிகையான மைலீன் ஜம்பனோனியை கோவாவில் வைத்து 2006 இல் திருமணம் செய்தார். பிறகு இருவரும் 2008இல் பிரிந்து  செல்வதாக முடிவு எடுத்தனர்.2009 ல் விவாகரத்து பெற்றனர். பின்னர் மிலிந்த் மற்றும் ஷஹானா ஜோடி 2010 ஆம் ஆண்டு முதல் வெளிச்சத்திற்கு வந்தனர். அவர்கள் 21 வயது வித்தியாசம் அப்போது விமர்சனம் செய்யப்பட்டது.ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. பிறகு இந்த ஜோடி 2013 ஆம் ஆண்டு பிரிந்தது.

திப்பணித சர்மா,பிபசாபாசு, குல் பனாக் உள்பட பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக  தகவல்கள் உலவின.

ஆசிரியரின் தேர்வுகள்...