சினிமா செய்திகள்

மக்களை பாதிக்கும் அரசியல் கொள்கைகளை எதிர்ப்பேன் -நடிகர் அரவிந்தசாமி + "||" + I oppose the political policies that affect people - Actor Arvindasamy

மக்களை பாதிக்கும் அரசியல் கொள்கைகளை எதிர்ப்பேன் -நடிகர் அரவிந்தசாமி

மக்களை பாதிக்கும் அரசியல் கொள்கைகளை எதிர்ப்பேன் -நடிகர் அரவிந்தசாமி
மக்களை பாதிக்கும் அரசியல் கொள்கைகளை தொடர்ந்து எதிர்ப்பேன் என்று நடிகர் அரவிந்தசாமி கூறினார்.
சித்திக் இயக்கத்தில் அரவிந்தசாமி-அமலாபால் ஜோடியாக நடித்துள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்.’ நாசர், சூரி, ரமேஷ் கண்ணா, சித்ரா லட்சுமணன் ஆகியோரும் நடித்துள்ளனர். அம்ரேஷ் இசையமைத்துள்ளார். ஹர்ஷினி மூவிஸ் தயாரித்துள்ளது. பரதம் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. மலையாளத்தில் மம்முட்டி-நயன்தாரா நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தின் தமிழாக்கமாக இது தயாராகி உள்ளது.

இந்த படக்குழுவினர் சென்னையில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் அரவிந்தசாமி கூறியதாவது:-

“படங்கள் எடுப்பது எளிது. ஆனால் அதை வெளியிடுவதுதான் கஷ்டம். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படமும் பிரச்சினைகளை தாண்டி திரைக்கு வருகிறது. நிறைய தயாரிப்பாளர்கள் அவர்களுடைய சேமிப்பை வைத்தும் கடன் வாங்கியும் கஷ்டப்பட்டு படங்கள் எடுக்கிறார்கள். அதை உணர்ந்து இந்த படம் வெளிவர சிறிய உதவிகள் செய்தேன்.

படங்களை திட்டமிட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் எடுத்து முடித்தால் செலவுகளை குறைக்க முடியும். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை சித்திக் சிறப்பாக இயக்கி உள்ளார். நகைச்சுவை பொழுது போக்கு அம்சங்கள் அதிகமாக இருக்கும். இசை சிறப்பாக வந்துள்ளது. சண்டை காட்சிகளும் நன்றாக இருக்கும்.

நல்ல கதை என்பதால் மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்தோம். நான் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் கதை பிடித்து இருந்தால் மற்ற கதாநாயகர்களுடனும் இணைந்து நடிப்பேன். வில்லனாகவும் நடிப்பேன்.

நான் டுவிட்டரில் கோபமாக கருத்துக்கள் பதிவிடுவதாக கூறுகிறார்கள். சாதாரண மக்களை பாதிக்கும் அரசியல் கொள்கைகளை தொடர்ந்து எதிர்ப்பேன். இதற்காக அரசியலுக்கு வரப்போவது இல்லை.