சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் விபத்து; நடிகை பிரியங்கா சோப்ரா படுகாயம் + "||" + Priyanka Chopra hurts knee while filming third season of 'Quantico'

படப்பிடிப்பில் விபத்து; நடிகை பிரியங்கா சோப்ரா படுகாயம்

படப்பிடிப்பில் விபத்து; நடிகை பிரியங்கா சோப்ரா படுகாயம்
குவான்டிகோ சீசன் 3 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக, பிரியங்கா சோப்ரா ஓய்வெடுத்து வருகிறார். #AlexIsBack #Quantico @QuanticoTV
வாஷிங்டன்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஆங்கில டிவி தொடரிலும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான ‘குவான்டிகோ’ தொடர் அமெரிக்காவில் பிரபலமானது. அதில் அலெக்ஸ் பாரிஷ் என்ற எஃப்.பி.ஐ ஏஜெண்டாக நடிக்கிறார்.

இதன் 3-வது சீசன் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  இதன் படப்பிடிப்பின் போது  விபத்து ஏற்பட்டது. அதில் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 3 வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனை தனது டுவிட்டரில் பிரியங்கா சோப்ரா பதிவிட்டுள்ளார்.