சினிமா செய்திகள்

“தன்னம்பிக்கையே எனது பலம்” -நடிகை திரிஷா + "||" + Actress Trisha has said that her strength is my confidence.

“தன்னம்பிக்கையே எனது பலம்” -நடிகை திரிஷா

“தன்னம்பிக்கையே எனது பலம்” -நடிகை திரிஷா
தன்னம்பிக்கையே எனது பலம் என நடிகை திரிஷா கூறியுள்ளார்.
நடிகை திரிஷா நீண்ட நாட்களுக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கலந்துரையாடினார். அவர் கூறியதாவது:

“எனது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு நான் தான் சிறந்த விமர்சகராக இருக்கிறேன். எனக்கு தன்னம்பிக்கை அதிகம். அதுதான் எனது பலமாகவும் இருக்கிறது. படப்பிடிப்பில் ஓய்வு கிடைத்தாலோ, மனதுக்கு கஷ்டமாக இருந்தாலோ நியூயார்க் சென்று விடுவேன். அது எனக்கு மிகவும் பிடித்த இடம்.

லண்டனுக்கும் அடிக்கடி செல்கிறேன். அங்கு நடைபயிற்சி செய்வேன். நிறைய சாப்பிடுவேன். எனது வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உந்துதலாக இருப்பது யார்? என்று கேட்கப்படுகிறது. அந்த சக்தி எனக்குள்தான் இருக்கிறது. உணவு, ஷாப்பிங் இரண்டிலும் சாப்பாடுதான் எனக்கு பிடிக்கும். சாப்பிடுவதற்காகவே வாழ்வதாக நினைக்கிறேன்.

தினமும் காலையில் எழுந்ததும் எனது செல்போனை நோண்டுவேன். அரசியலுக்கு வருவீர்களா? என்று என்னிடம் கேட்கப்படுகிறது. இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. சமைக்க அவ்வப்போது முயற்சி செய்து வருகிறேன். புதிய படத்தில் நடிக்க பேசி வருகிறேன். விரைவில் அறிவிப்பு வரும்.

சினிமா துறையில் என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்த துறையில் நிறைய புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஓய்வு நேரத்தில் திகில், மர்ம கதை புத்தகங்கள் படிப்பேன். எதிர்காலத்தில் டைரக்டராகும் திட்டம் இல்லை.”

இவ்வாறு திரிஷா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை திரிஷா எடுத்த திடீர் முக்கிய முடிவு!!
தமிழில் முன்னணி நடிகையாக ஒரு டஜன் ஆண்டுகளுக்கு மேலாக திரையில் ஜொலித்து வரும் நாயகி திரிஷா தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
2. டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு
நீச்சல் குளத்தில் டால்பின்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை திரிஷா வெளியிட்டார்.
3. ஓரின சேர்க்கை தீர்ப்பு : தமிழ் நடிகர்–நடிகைகள் கருத்து
ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கி இருப்பதை நடிகர்–நடிகைகள் வரவேற்று உள்ளனர். அதன் விவரம் வருமாறு:–

ஆசிரியரின் தேர்வுகள்...