சினிமா செய்திகள்

‘காலா’ படத்தில் நீட் தேர்வுக்கு பலியான அனிதா காட்சி + "||" + Anita scene in the Kaala film

‘காலா’ படத்தில் நீட் தேர்வுக்கு பலியான அனிதா காட்சி

‘காலா’ படத்தில் நீட் தேர்வுக்கு பலியான அனிதா காட்சி
ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திலும் அனிதா காட்சி இடம்பெறுகிறது.
திக மதிப்பெண் பெற்றும்கூட நீட் தேர்வினால் மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாமல் போராடி உயிர்விட்ட அனிதாவின் வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக தயாராகி வருகிறது. அனிதா கதாபாத்திரத்தில் ஜுலி நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திலும் அனிதா காட்சி இடம்பெறுகிறது. இந்த படத்தில் வரும் தெருவிளக்கு என்ற பாடலில் இந்த காட்சி வருகிறது. தெருவிளக்கு வெளிச்சத்துல, நாங்க முன்னேறுவோம் என்று தொடங்கும் வரிகளுக்கு பின்னணியில் அனிதா படம் காட்டப்படுகிறது. மும்பை தாராவி பகுதியில் அனிதாவின் சுவரொட்டியை ஒட்டி வைத்து ‘டாக்டர் அனிதா, தமிழர்கள், நீட் தேர்வுக்கு எதிரானவர்கள்’ என்று வாசகத்தை அதில் குறிப்பிட்டு உள்ளனர். மும்பை விழித்தெழு இயக்கம் என்றும் அந்த சுவரொட்டியின் கீழ் எழுதி உள்ளனர்.

நெல்லையில் இருந்து சென்று தாராவி பகுதியில் தாதாவாக மாறி அங்குள்ள தமிழ் மக்களுக்காக போராடுபவர் பற்றிய படமாக காலா இருந்தாலும் தமிழர்களை பாதிக்கும் நீட் தேர்வு உள்ளிட்ட பல சமூக பிரச்சினைகளையும் படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர். காலா பாடலில் இடம்பெற்றுள்ள அனிதா உருவப்பட சுவரொட்டியை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதனால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த படத்தில் நானே படேகர் வில்லனாக வருகிறார். சமுத்திரக்கனி, கியூமா குரோஷி, அஞ்சலி பட்டீல், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதியை அழித்து பாலம், கட்டிடங்களை எழுப்பும் உள்ளூர் அரசியல் தாதாவை எதிர்த்து போராடும் மக்களின் வாழ்வியல் படமாக இது தயாராகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கலைத்துறையில் மட்டுமே உள்ளார்; அரசியலுக்கு ரஜினிகாந்த் இன்னும் வரவில்லை கி.வீரமணி பேட்டி
ரஜினிகாந்த் அரசியலுக்கு இன்னும் வரவில்லை. கலைத்துறையில் மட்டுமே உள்ளார் என கி.வீரமணி கூறினார்.
2. சென்னையில் ரஜினிகாந்த் - திருமாவளவன் - திருநாவுக்கரசர் சந்திப்பு
சென்னையில் ரஜினிகாந்த் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார்.
3. ‘ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது’ ஆர்.எம்.வீரப்பன் பேட்டி
ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என்று ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.
4. ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் தமிழக பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
5. முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த் நடிப்பில் ‘2.0’ படத்துக்கு பிறகு ‘பேட்ட’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...