சினிமா செய்திகள்

பிரபல மலையாள நடிகர் கலாசால பாபு மரணம் + "||" + Malayalam actor Kalasala Babu passes away aged 63 in Ernakulum due to cerebral hemorrhage

பிரபல மலையாள நடிகர் கலாசால பாபு மரணம்

பிரபல மலையாள நடிகர் கலாசால பாபு மரணம்
பிரபல மலையாள நடிகர் கலாசால பாபு இன்று மரணமடைந்தார்.

திருவனந்தபுரம்

கலாசால பாபு பிரபல மலையாள இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் பிரபல மலையாள நட்சத்திரங்களுடன் பல வெற்றித்திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். 1977 ஆம் ஆண்டு வெளியான இணையே தேடி என்ற மலையாளத்திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார்.  வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் கலாசால பாபு சிகிச்சை பெற்றுவந்தார். சமீபத்தில் இவருக்கு ஆபரேஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட வலிப்பால் தனது 63ஆவது வயதில் இன்று மரணமடைந்தார்.

இவரது இழப்பு மலையாள திரையுலகினரை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கலாசால பாபுவின் பிரிவால் துயரத்திலிருக்கும் அவர் குடும்பத்திற்கு, திரையுலகை சார்ந்த அவரது நண்பர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 கஸ்தூரி மான், துருக்கு குலான், லயன் ஆகியவை அவருக்கு  பெயர்வாங்கி தந்தன. கடைசியாக அவர நடித்தபடம் குயின்