சினிமா செய்திகள்

“சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது; ஆனால்...” + "||" + "Simbu's place is exactly the same; But..."

“சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது; ஆனால்...”

“சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது; ஆனால்...”
சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது.

நடிகர் சிம்பு, ஒளிவு மறைவு இல்லாதவர். மற்ற நடிகர்களில் இருந்து வித்தியாசமானவர். தன் மனதில் தோன்றுவதை செய்வது, யாருக்கும் பயப்படாமல் செயல்படுவது என துணிச்சலான சுபாவம் கொண்டவர். அவர் மீது பல குற்றச்சாட்டுகள், பல புகார்களை சிலர் கூறினாலும், சிம்பு ரசிகர்கள் அவரை ஒருபோதும் கைவிட்டது இல்லை.

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சிம்பு ரசிகர் மதன், ‘பேனர்’ வைத்த தகராறில் கொலை செய்யப்பட்டார். அவர் உயிர் பிரிந்த 10-வது நாள் சடங்கு நடந்தது.

தனது ரசிகர் மதனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சிம்பு, நினைவஞ்சலி ‘போஸ்டர்’களை ஒட்டினார். அதைப்பார்த்து சிம்பு ரசிகர்கள் நெகிழ்ந்து போய் கண்கலங்கினார்கள்.

இதுபற்றி நடிகர் விவேக் தனது டுவிட்டரில், தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை...இவை பழகினால் மீண்டும் உயர்வார். அவர் இடம் அப்படியே இருக்கிறது என்று பதிவு செய்து இருக்கிறார்.