ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ஜி.வி.பிரகாஷ் கண்டனம்


ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ஜி.வி.பிரகாஷ் கண்டனம்
x
தினத்தந்தி 22 May 2018 11:48 PM GMT (Updated: 22 May 2018 11:48 PM GMT)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் கிளர்ச்சி நடந்து வருகிறது. தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.

அரசியல் கட்சி தலைவர்களும் திரைத்துறையினரும் இதில் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் நேற்று ஊர்வலமாக சென்றபோது கலவரம் மூண்டது.

கல் வீச்சு, வாகனங்கள் எரிப்பு என்று வன்முறைகள் நடந்தன. கலவரத்தை அடக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். கண்ணீர் புகை குண்டுகளை வீசி, துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு பட உலகை சேர்ந்த பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், “உயர்நீதி மன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதற்கு தடை விதிக்க முடியாது என்பதால் தங்கள் உரிமைக்காக அமைதி பேரணி சென்ற எம் மக்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.

Next Story