சினிமா செய்திகள்

இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் விவாகரத்து: ஹிருத்திக்கின் முன்னாள் மனைவியுடன் நெருக்கம் காரணமா? + "||" + Hindi actor Arjun Rampal's divorce: Will he be close to Hrithik's ex-wife?

இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் விவாகரத்து: ஹிருத்திக்கின் முன்னாள் மனைவியுடன் நெருக்கம் காரணமா?

இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் விவாகரத்து: ஹிருத்திக்கின் முன்னாள் மனைவியுடன் நெருக்கம் காரணமா?
ஹிருத்திக்கின் முன்னாள் மனைவியுடன் கொண்டுள்ள நெருக்கம் காரணமா என தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலும், அவரது மனைவி மெகர் ஜெஸ்சியாவும் பிரிந்துள்ளனர். இருவருக்கும் 1998-ல் திருமணம் முடிந்து 20 வருடங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார்கள். இவர்களுக்கு 16 வயதில் மகிஹா, 13 வயதில் மிய்ரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் அர்ஜுன் ராம்பாலுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது பிரிவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் “எங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அழகாகவும் நகர்ந்தது. காதலும் நிரம்பி இருந்தது. தற்போது நாங்கள் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறோம். எனவே பிரிவதற்கு இது சரியான தருணம் என்று கருதுகிறோம். ஆனாலும் எங்கள் காதல் அப்படியேதான் இருக்கும். எங்கள் குழந்தைகள் நலனில் இருவரும் அக்கறை எடுப்போம்” என்று தெரிவித்து உள்ளனர்.

இவர்கள் விவாகரத்து செய்து பிரிவது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜுன் ராம்பாலும், ஹிருத்திக் ரோஷனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஹிருத்திக் தனது மனைவி சுசானேவை சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்தார். அதன்பிறகு அர்ஜுன் ராம்பாலுக்கும், சுசானேவுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் மும்பையில் உள்ள ஓட்டல்களில் அடிக்கடி ஒன்றாக விருந்து சாப்பிடுவதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பின. இதனை இருவருமே மறுத்து வந்தார்கள். இப்போது அர்ஜுன் ராம்பால் மனைவியை பிரிவதற்கு சுசானேதான் காரணம் என்று மும்பை பட உலகில் பேசப்படுகிறது.