சினிமா செய்திகள்

‘காலா’ திரைப்படம் தொடர்பாக ரஜினிகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ் + "||" + Rajnikanth Film Gala in relation to the lawyer notice

‘காலா’ திரைப்படம் தொடர்பாக ரஜினிகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ்

‘காலா’ திரைப்படம் தொடர்பாக ரஜினிகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ்
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

புதுடெல்லி,

‘காலா’ திரைப்படம் தொடர்பாக மும்பை கிழக்கு சியான் பகுதியில் வசிக்கும் ஜவகர் நாடார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் டாக்டர் சையத் எஜாஸ் அப்பாஸ் நக்வி என்பவர் மூலம் ரஜினிகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், ‘காலா’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரவியம் நாடாரின் நற்பெயருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இழுக்கு ஏற்படுத்துவது போல அமைந்துள்ளது என்றும், எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 36 மணி நேரத்துக்குள் இதுவரை ‘காலா’ படம் மற்றும் அதன் கதை குறித்து நீங்கள் பொதுவில் கூறி வந்த கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து என் கட்சிக்காரரின் குடும்பத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும் என்றும், இல்லையேல் கிரிமினல் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த நோட்டீசின் பிரதி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் மற்றும் தணிக்கை குழுவுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா?
புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
2. இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்
இளையராஜா விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
3. அமெரிக்காவில் ஓய்வை முடித்து ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்
அமெரிக்காவில் ஓய்வை முடித்து, நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்ப உள்ளார்.
4. ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது எப்போது?
‘நான் எப்போது வருவேன்? எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டாக வருவேன்’ என்று ஒரு திரைப்படத்தில் ரஜினிகாந்த் கூறுவார். அது அவரது அரசியல் பிரவேசத்துக்கும் சரியாக பொருந்தும்.
5. ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் டிரெய்லர் 28-ந்தேதி வெளியீடு
ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் டிரெய்லர் 28-ந்தேதி வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...