சினிமா செய்திகள்

காலா திரைப்படம் எப்படி உள்ளது பிரபலங்கள் கருத்து + "||" + How is the kaala movie? Celebrities comment

காலா திரைப்படம் எப்படி உள்ளது பிரபலங்கள் கருத்து

காலா திரைப்படம் எப்படி உள்ளது பிரபலங்கள் கருத்து
இன்று காலா திரைப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர். #Kaala #Rajinikanth
சென்னை

பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்றிரவு வெளியானது. சென்னை மற்றும்  புறநகர்களில் இன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.

இந்த சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்ட திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதேபோல் சென்னை நகரில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.

சென்னையில் ரஜினியின் காலா படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரச்சனை எதுவும் ஏற்படாமல் தடுக்க தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று  காலா திரைபடத்தை பார்த்த பிரபலங்கள் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
காலா திரைப்படம் சமூக இணையதளங்களில் வெளியானது குறித்து சவுந்தர்யா ரஜினிகாந்தகூறும் போது குறித்து  சமூக வலைத்தளங்களை அனைவரும் முறையாக பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

நான் ரஜினியின் தீவிர ரசிகன்; காலா படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன் - நடிகர் அமீர் கான் ட்வீட் செய்து உள்ளார்.