சினிமா செய்திகள்

அனுபமா பரமேஸ்வரன் மீது புகார் + "||" + Complaint of Anupama Parameswaran

அனுபமா பரமேஸ்வரன் மீது புகார்

அனுபமா பரமேஸ்வரன் மீது புகார்
அனுபமா பரமேஸ்வரன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கொடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக வந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 3 தெலுங்கு படங்கள் கைவசம் வைத்துள்ளார். படப்பிடிப்பில் கேரவன் கேட்டு படக்குழுவினரை தொல்லை செய்வதாக அனுபமா பரமேஸ்வரன் மீது புகார் கிளம்பி உள்ளது.

பொதுவாக இரண்டு வகை கேரவன்களை படப்பிடிப்பில் பயன்படுத்துகின்றனர். ஒரு கதவு மட்டுமே உள்ள கேரவன்கள் உள்ளன. இதை ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடியும். இன்னொரு வகை கேரவனில் இரண்டு கதவுகள் இருக்கும். இதில் இரண்டு பேர் இருக்கலாம். இதற்கு அதிக வாடகை கொடுக்க வேண்டும்.

தனக்கு ஆடம்பரமான இரண்டு கதவுகள் உள்ள கேரவன் வேண்டும் என்றும், அதில் மற்றவர்கள் யாரும் வரக்கூடாது என்றும் அனுபமா நிபந்தனை விதித்தாராம். இதனால் வேறு வழியின்றி இரண்டு கதவு கேரவனை படக்குழுவினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

அதற்குள் ஆடம்பர வசதிகள் இல்லை என்று தகராறு செய்ததாகவும், அமைதியாக இருக்கும்படி சமரசப்படுத்திய தனது ஊழியரை வேலையில் இருந்து நீக்கி விட்டதாகவும் கிசுகிசு கிளம்பி உள்ளது. அத்துடன் ஆடை வடிவமைப்பாளரை பட நிறுவனம் நியமிக்க கூடாது என்றும் நானே சொந்தமாக வைத்துக்கொள்வேன். சம்பளம் மட்டும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்றும் அடம்படிக்கிறாராம். இதனால் படக்குழுவினர் அவர்மீது புகார் கூறியுள்ளனர்.