சினிமா செய்திகள்

ஊட்டியில் இன்று நடக்க இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் திருமணம் நிறுத்தம் + "||" + The feeding had been going on today Actor Mithun Chakravarthy Son marriage stopped

ஊட்டியில் இன்று நடக்க இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் திருமணம் நிறுத்தம்

ஊட்டியில் இன்று நடக்க இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் திருமணம் நிறுத்தம்
ஊட்டியில் இன்று நடக்க இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் திருமணம் ஒரு பெண்ணால் நிறுத்தப்பட்டது. #MithunChakravarthy
நீலகிரி

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி இவரது மகன்  மகா அக்ஷய். இவர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். இந்த செய்தி பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மகா அக்ஷயை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமாக  ஊட்டியில் உள்ள ஓட்டலில் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமணத்தில் பங்கேற்க பல விஐபிகள் ஊட்டியில் குவிந்தனர். இன்று (சனிக்கிழமை) திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் பாதிக்கபட்ட பெண் டெல்லி போலீஸாரிடம்  இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.