சினிமா செய்திகள்

வாழ்வதற்கு கோடிகள் தேவை இல்லை “வீடு, கார் வாங்க சம்பாதித்தால் போதும்” -நடிகை அனுபமா பரமேஸ்வரன் + "||" + Actress Anima Parameswaran

வாழ்வதற்கு கோடிகள் தேவை இல்லை “வீடு, கார் வாங்க சம்பாதித்தால் போதும்” -நடிகை அனுபமா பரமேஸ்வரன்

வாழ்வதற்கு கோடிகள் தேவை இல்லை “வீடு, கார் வாங்க சம்பாதித்தால் போதும்” -நடிகை அனுபமா பரமேஸ்வரன்
தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் வந்த அனுபமா பரமேஸ்வரனுக்கு மேலும் 2 பட வாய்ப்புகள் வந்துள்ளன.
தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் வந்த அனுபமா பரமேஸ்வரனுக்கு மேலும் 2 பட வாய்ப்புகள் வந்துள்ளன. தெலுங்கு, மலையாள மொழிகளிலும் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமாவில் கசப்பான அனுபவம் ஏற்படவில்லை. எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள். அன்பாக பழகுகிறார்கள். கேரவன் வாழ்க்கை எனக்கு பிடிக்காது. படப்பிடிப்புகள் நடக்கும்போது அரங்குக்குள் இருந்து கேமரா முன்னாலும் பின்னாலும் நடப்பதை உன்னிப்பாக கவனிக்கிறேன்.

இதனால் சினிமாவை பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளேன். எதிர்காலத்தில் இந்த அனுபவங்கள் எனக்கு பயன்படலாம். சவாலான வேடங்களில் நடிக்கவே பிடிக்கிறது. சினிமாவில் வெற்றி தோல்வி சகஜமானது. தோல்வியை நினைத்து வருத்தப்படுவதில் பயன் இல்லை. தோல்விக்கான காரணத்தை தெரிந்து அடுத்த படத்தில் அதை சரிசெய்ய வேண்டும்.

ரசிகர்கள் முக்கியம். அவர்கள் இல்லை என்றால் சினிமாவே கிடையாது. எனக்கு அவர்கள் ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. எனக்கு பொருளாதார தெளிவு இருக்கிறது. வாழ்வதற்கு பெரிய அளவில் கோடிக்கணக்கான பணம் தேவை இல்லை. ஒரு வீடு, ஒரு கார் வாங்கும் அளவுக்கு சம்பாதித்தால் போதும். நான் ஷாப்பிங்குக்காக வெளியே செல்ல மாட்டேன்.

ஐதராபாத்தில் இருக்கும்போது 1000 ரூபாய் என் கையில் இருந்தால் போதும் என்று நினைப்பேன். உணவு விஷயங்களிலும் ஆசை இல்லை. சாதம், பருப்பு, தயிர் இருந்தால் போதும். மூன்று வேளைக்கும் இதே உணவு கிடைத்தாலும் மகிழ்ச்சிதான். ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனிகளை தொடுவது இல்லை.”

இவ்வாறு அனுபமா பரமேஸ்வரன் கூறினார்.