சினிமா செய்திகள்

விஷால் என்னை மிரட்டுகிறார் - ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீ ரெட்டியின் அடுத்த பரபரப்பு + "||" + I am feeling threat from tamil actor vishal reddy..but I wanted to reveal secrets of kollywood dark side..-sri reddy

விஷால் என்னை மிரட்டுகிறார் - ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீ ரெட்டியின் அடுத்த பரபரப்பு

விஷால் என்னை மிரட்டுகிறார் - ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீ ரெட்டியின் அடுத்த பரபரப்பு
தமிழ் திரையுலகில் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றியவர்கள் பட்டியலை தினமும் ஒருவராக வெளியிட்டு வரும் ஸ்ரீ ரெட்டி, தனக்கு விஷால் மிரட்டல் விடுத்திருப்பதாக கூறி உள்ளார். #vishalreddy #srireddy
ஐதராபாத்

நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தியதும் இந்திய பட உலகையே அதிர வைத்தது. நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதுகுறித்து மகளிர் ஆணையம் விசாரணையில் இறங்கி இருக்கிறது.

அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல் தன்னிடம் இருப்பதாக இன்னொரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டார். தமிழ் பட டைரக்டர் ஒருவர் மீதும் ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். அவரது பெயரை வெளியிடவில்லை.

தனது முகநூல் பக்கத்தில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு தொடர்ந்து அவர்கள் மீது புகார் தெரிவித்து வருகிறார். நடிகர் நானியும் தன்னிடம் தவறாக நடந்ததாக கூறினார். இதனை மறுத்த அவர் ஸ்ரீரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

இந்த நிலையில் தமிழ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பெயரையும் இப்போது சர்ச்சையில் இழுத்து இருக்கிறார் ஸ்ரீரெட்டி.

தனது முகநூல் பக்கத்தில், “ஹாய் தமிழ் டைரக்டர் முருகதாஸ் ஜி. நலமாக இருக்கிறீர்களா? பசுமையான நட்சத்திர ஓட்டல் நினைவிருக்கிறதா? வெளிகொண்டா சீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் நமக்கு இடையே நிறைய... இதுவரை எனக்கு நீங்கள் எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை. நீங்களும் கூட சிறந்த நபர்தான் சார்” என்று கூறியுள்ளார்.

ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் முருகதாஸ். இப்போது விஜய் நடிக்கும் சர்கார் படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

நடிகர் ஸ்ரீகாந்த் படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, “5 வருடங்களுக்கு முன்னால் ஐதராபாத்தில் ஓட்டலில் நடந்த சி.சி.எல். கிரிக்கெட் விருந்து நினைவிருக்கிறதா. நீங்கள் என்னுடைய....(ஆபாச வார்த்தைகள்). கிளப்பில் நாம் இருவரும் சேர்ந்து நடனம் ஆடியபோது படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்தீர்களே. உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் எனக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி. இது தமிழ் திரையுலக நேரம் என்றும் கூறியிருக்கிறார்.

ஸ்ரீரெட்டி சொல்லி இருப்பது தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த  நிலையில் மீண்டும் ஒரு குண்டை தூக்கி வீசி உள்ளார். ஸ்ரீ ரெட்டி  அது நடிகர் ராகவா லாரன்ஸை பற்றியது.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ஹைதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹோட்டலில் ஒரு நண்பர் மூலம் ராகவா லாரன்ஸை சந்தித்தேன். என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றார். அறையில் ராகவேந்திரா சாமி படத்தையும், ருத்திராட்ச மாலைகளையும் வைத்திருந்தார். அதைப் பார்த்து நான் வியப்படைந்தேன்.

ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்ததால், புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன்.

ஆனால், போக போக அவரின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது. என் உடலின் வயிற்றுப்பகுதி உட்பட சில பகுதிகளை காட்ட சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார்.

அதன்பின் படுக்கையில் தள்ளி என்னிடம் உறவு கொண்டார். கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதை நம்பி சில நாட்கள் அவருடன் நட்புடன் பழகினேன். ஆனால், எதுவும் செய்யவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

போகிற போக்கில் அனைவர் மீதும் ஸ்ரீரெட்டி சேற்றை வாரி இறைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீ ரெட்டி தனது அடுத்த பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் சங்கத் தலைவர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். ஆனாலும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எனக்கு அனிஷாவுடன் திருமணம் நடிகர் விஷால் அதிகாரபூர்வ அறிவிப்பு
எனக்கு அனிஷாவுடன் திருமணம் என ட்விட்டரில் நடிகர் விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.
2. ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சி -கணவர் நோட்டீஸ்
ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
3. ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் கிளாமராக நடிக்கும் பிரியா வாரியர்- டிரெய்லர்
ஸ்ரீதேவி வாழ்க்கை கதையான் அஸ்ரீதேவி பங்களாவில் பிரியா பிரகாஷ் வாரியர் கிளாமராக நடித்து உள்ளார். அதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
4. பேட்ட, சர்கார், விஸ்வாசம் - ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்?
தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் வெளியான பேட்ட, சர்கார், விஸ்வாசம் ஆகியவற்றின் வசூல்களில் ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்.
5. ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் முதல் நாள் வசூலில் முந்தியது யார்?
நேற்று வெளியான ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் ஆகியவை முதல் நாள் எப்படி உள்ளது? என்ற விவரம் வெளியாகி உள்ளது.