சினிமா செய்திகள்

கமல், நயன்தாரா படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் + "||" + Kamal, Nayanthara movies released on the same day

கமல், நயன்தாரா படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்

கமல், நயன்தாரா  படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்–2’ படம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10–ந் தேதி திரைக்கு வருகிறது.
நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படமும் அதே நாளில்  வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். ஒரே நாளில் இருவர் படங்களும் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

விஸ்வரூபம்–2 படத்தை கமல்ஹாசனே டைரக்டு செய்து கதாநாயகனாகவும் நடித்துள்ளார். பூஜா குமார், ஆண்ட்ரியா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ராகுல்போஸ், சேகர் கபூர் ஆகியோரும் உள்ளனர். இது விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.


கோலமாவு கோகிலா படத்தில் கதாநாயகன் இல்லை. நயன்தாரா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளனர். நெல்சன் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தில் குடும்ப வறுமையை போக்க போதை மருந்து கடத்தும் பெண்ணாக நயன்தாரா நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. அவரை ஒருதலையாக காதலிப்பவராக யோகிபாபு வருகிறார். நகைச்சுவை, திரில்லர் படமாக உருவாகி உள்ளது.

போதை மருந்து வி‌ஷயம் இருப்பதால் படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் அளிக்க மறுத்து ‘யுஏ’ சான்று அளித்து இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கமலின் வயதான தோற்றத்தில் மாற்றம்: இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது
கமலின் வயதான தோற்றத்தில் மாற்றம் செய்யப்பட்டு, இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
2. ஜோடியாக நயன்தாரா: விஜய்யின் 63-வது படப்பிடிப்பு தொடக்கம்
விஜய்யின் 63-வது படப்பிடிப்பு தொடங்கியது. இதில் விஜய்யின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
3. பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
நடிகை நயன்தாராவின் இன்னொரு திகில் படம் ஒன்று வெளியாக உள்ளது.
4. அரசியல் படத்தில், நயன்தாரா
அறம்–2 படத்தில், நயன்தாரா அரசியலில் ஈடுபடுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
5. விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம்
விளம்பர படங்களில் நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்குபவர், நயன்தாராதான்.

ஆசிரியரின் தேர்வுகள்...