சினிமா செய்திகள்

‘சார்லி சாப்ளின்-2’வில்பிரபுதேவா ஜோடியாக 2 கதாநாயகிகள் + "||" + Charlie Chaplin-2 Prabhu Deva is pair with 2 heroines

‘சார்லி சாப்ளின்-2’வில்பிரபுதேவா ஜோடியாக 2 கதாநாயகிகள்

‘சார்லி சாப்ளின்-2’வில்பிரபுதேவா ஜோடியாக 2 கதாநாயகிகள்
சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, அடா சர்மா நடிக்கிறார்கள்.
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து வந்த ‘பார்ட்டி’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதையடுத்து அவர், ‘சார்லி சாப்ளின்-2’ படத்தை தயாரிக்கிறார். முதல் பாகத்தின் கதாநாயகன் பிரபுதேவா, இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக அடா சர்மா நடிக்கிறார்.

முதல் பாகத்தில் நடித்த பிரபு, இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா மற்றும் பலரும் நடிக்கிறார்கள். வில்லன்களாக தேவ் கில், சமீர் கோச்சார் ஆகிய இரண்டு பேரும் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் டி.சிவா முக்கிய வேடம் ஏற்க, கவுரவ வேடத்தில் வைபவ் நடிக்கிறார்.

அம்ரீஷ் இசையமைக்கிறார். ஷக்தி சிதம்பரம் கதை-திரைக் கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்காக டி.வி. புகழ் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி ஜோடி பாடிய ஒரு பாடல் பதிவானது. அந்த பாடலுக்கு ஏற்ப பிரவுதேவா-நிக்கி கல்ராணி ஆடிப்பாடிய பாடல் காட்சி, பொள்ளாச்சியில் 5 நாட்கள் படமாக்கப்பட்டது.