சினிமா செய்திகள்

25 வயது பாடகரை விரைவில் கரம் பிடிக்கிறார் 36 வயது பிரியங்கா சோப்ரா + "||" + Priyanka Chopra and Nick Jonas got engaged in London on her 36th birthday: Reports

25 வயது பாடகரை விரைவில் கரம் பிடிக்கிறார் 36 வயது பிரியங்கா சோப்ரா

25 வயது பாடகரை விரைவில் கரம் பிடிக்கிறார் 36 வயது பிரியங்கா சோப்ரா
25 வயது பாடகரை விரைவில் கரம் பிடிக்கிறார் 36 வது வயதில் அடியெடுத்து வைக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா . #PriyankaChopra


பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்துள்ளதாக பிரபல இதழ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்து உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக, நிக் ஜோன்ஸ் மற்றும் பிரியங்கா இருவரும் ஒன்றாக இணைந்து நியூயார்க்கில் வலம் வந்து உள்ளனர்.

சில ஆண்டுகளாகவே இருவருக்கும் நட்பு இருந்தாலும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தான் அதிகமாக இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்று, ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு உள்ளனர். பின்னர், இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த அதிரடி முடிவின் விளைவாக, சல்மான் கானுடன் நடித்து வெளிவர இருந்த பாரத் படத்தில்இருந்து, பிரியங்கா சோப்ரா விலகினார்.

இது குறித்து, பாரத் பட இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.

அதில், மிக முக்கியமான சந்தோஷமான நிகழ்விற்காக பிரியங்காசோப்ரா பாரத் படத்தில் இருந்து விலகுகிறார் என்றும், அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டு உள்ளார்.

இவர்கள் இருவரும் இன்னும் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், நிக் ஜோன்ஸ் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நிக்கை இதுவரை இவ்வளவு சந்தோசமாக பார்த்தது கிடையாது என்று தெரிவித்து உள்ளனர்.

மேலும், என்கேஜ்மெண்ட் மோதிரம் வாங்க, நிக் ஷாபிங் செய்துவருவதாக கூறப்படுகிறது. ஆனால் மற்றொரு தகவல் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் இந்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. உடலில் நெருப்பு பற்ற வைத்த அக்‌ஷய்குமாரை பார்த்து மனைவி அதிர்ச்சி
உடலில் நெருப்பு பற்ற வைத்த நடிகர் அக்‌ஷய்குமாரை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.
2. பெண்களை இழிவுபடுத்தும் நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் - சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்
பெண்களை இழிவுபடுத்தும் நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
3. ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன்- கமல்ஹாசன்
சென்னை விமான நிலையத்தில் பேசிய கமல்ஹாசன், ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
4. பாராளுமன்ற தேர்தல் 2019 : சமூக வலைதளத்தில் மறைமுக பிரசாரத்திற்கு பிரபலங்கள் வைத்த டிமாண்ட்
2019 பாராளுமன்ற தேர்தலுக்கு சமூக வலைதளத்தில் மறைமுக பிரசாரத்திற்கு பிரபலங்கள் முக்கிய டிமாண்ட் வைத்து உள்ளனர். சிலர் அதனை மறுத்தும் உள்ளனர்.
5. மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்; கட்சிகள் தாங்களே சொல்லிக்கொள்ள கூடாது - கமல்ஹாசன்
மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். கட்சிகள் தாங்களே சொல்லிக்கொள்ள கூடாது என கமல்ஹாசன் கூறினார்.