சினிமா செய்திகள்

ஆயுத பூஜைக்கு வரும் 3 புதிய படங்கள் + "||" + 3 new films coming to Aayutha Pooja

ஆயுத பூஜைக்கு வரும் 3 புதிய படங்கள்

ஆயுத பூஜைக்கு வரும் 3 புதிய படங்கள்
ஆயுத பூஜைக்கு பிரபல நடிகர்களின் படங்கள் மோதுகின்றன.
பெரிய பட்ஜெட் படங்களை ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அனுமதி பெற்று திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. சிறுபட்ஜெட் படங்களை அதற்கு முன்பாகவோ அல்லது பண்டிகை காலம் முடிந்தோ திரையிட தேதி நிர்ணயம் செய்கிறார்கள். 

அக்டோபர் 18–ந் தேதி ஆயுத பூஜைக்கு பிரபல நடிகர்களின் படங்கள் மோதுகின்றன. அன்றைய தினம் விஷாலின் சண்டக்கோழி–2 படம் திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி படமும் அதே நாளில் ரிலீசாகிறது. தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தையும் ஆயுத பூஜையில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல். 

அதோடு தெலுங்கில் வசூல் குவித்த அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய்தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகி உள்ள நோட்டா படமும் ஆயுத பூஜையை குறி வைத்துள்ளது. 2005–ல் வெளியான சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகமாக சண்டக்கோழி–2 தயாராகி உள்ளது. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தை லிங்குசாமி இயக்கி உள்ளார். 

காற்றின்மொழி துமாரி சூளு என்ற இந்தி படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகிறது. ராதாமோகன் டைரக்டு செய்கிறார். வடசென்னை படத்தை வெற்றி மாறன் இயக்கி உள்ளார். தாதாக்கள் மோதலை பற்றிய படம். தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் படம் வெளியாகிறது. கமல்ஹாசனின் விஸ்வரூபம்–2 படம் வருகிற 10–ந் தேதியும் ரஜினிகாந்தின் 2.0 படம் நவம்பர் 29–ந் தேதியும் திரைக்கு வருகின்றன.