சினிமா செய்திகள்

நடிகர்கள் ஒத்துழைக்க மறுத்தால் “ராஜினாமா செய்வது பற்றி யோசிப்பேன்” - மோகன்லால் + "||" + If the actors refuse to cooperate "I'll think of resigning" - Mohanlal

நடிகர்கள் ஒத்துழைக்க மறுத்தால் “ராஜினாமா செய்வது பற்றி யோசிப்பேன்” - மோகன்லால்

நடிகர்கள் ஒத்துழைக்க மறுத்தால் “ராஜினாமா செய்வது பற்றி யோசிப்பேன்” - மோகன்லால்
நடிகர்கள் ஒத்துழைக்க மறுத்தால் ராஜினாமா செய்வது பற்றி யோசிப்பேன் என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகர் சங்கத்தில் மோதல் வலுத்து வருகிறது. நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட திலீப்பை மோகன்லால் புதிய தலைவரானதும் மீண்டும் சேர்த்தார். இது நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மோகன்லால் செயலை கண்டித்தனர்.


ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். மலையாள பெண்கள் சினிமா கூட்டுக்குழுவும் மோகன்லாலுக்கு எதிராக களம் இறங்கியது. எதிர்ப்புகள் வலுப்பதால் நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மோகன்லால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில் அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த நடிகைகள் ரேவதி, பத்மபிரியா ஆகியோரும் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்ததும் மோகன்லால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“நடிகர் சங்கத்தில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் அவற்றுக்கு தீர்வு காண்பது குறித்தும் செயற்குழுவில் ஆலோசித்தோம். பெண்கள் சினிமா கூட்டுக்குழுவினரின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டுவோம். அவர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். எல்லோருடைய பிரச்சினைகளையும் கேட்டு அவற்றை தீர்த்து வைப்போம்.

சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய நான் முடிவு செய்யவில்லை. நடிகர்-நடிகைகள் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நிலைமை ஏற்பட்டால் அப்போது ராஜினாமா செய்வது குறித்து யோசிப்பேன்.” இவ்வாறு மோகன்லால் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலில் வடகர்நாடகத்தில் கட்சிக்கு பின்னடைவு எஸ்.ஆர்.பட்டீல், காங்கிரஸ் செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார
சட்டசபை தேர்தலில் வடகர்நாடகத்தில் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதால், எஸ்.ஆர்.பட்டீல், காங்கிரஸ் செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இது கூட்டணி ஆட்சியின் வீழ்ச்சிக்கான தொடக்கம் என பா.ஜனதா விமர்சனம் செய்தது.
2. 3 நாள் பா.ஜனதா ஆட்சி முடிந்தது ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா
காங்கிரஸ் அணி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
3. எடியூரப்பா ராஜினாமா பற்றி ராகுல் பரபரப்பு கருத்து
கர்நாடக முதல்–மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்தது பற்றி ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், ‘‘அதிகாரம், பணம், ஊழல் அல்ல, மக்களின் விருப்பம்தான் நிறைவேறும்’’ என்று குறிப்பிட்டார்.
4. எடியூரப்பாவின் ராஜினாமா ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி சித்தராமையா பேட்டி
முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று சித்தராமையா கூறினார்.
5. கருணாஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்யக்கோரி தி.மு.க. துண்டு பிரசுரம் வினியோகம்
கருணாஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய வலியுறுத்தி தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.