சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் படத்தை அடுத்து விஜய் படத்தின் வசூல் சாதனை + "||" + Next to Rajinikanth Vijay film box office record

ரஜினிகாந்த் படத்தை அடுத்து விஜய் படத்தின் வசூல் சாதனை

ரஜினிகாந்த் படத்தை அடுத்து விஜய் படத்தின் வசூல் சாதனை
விஜய் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம், ‘மெர்சல்.’
மெர்சல் படம் ரூ.200 கோடிக்கும் மேல் வியாபாரம் ஆனதாக சொல்லப்பட்டது.

இந்தநிலையில் அடுத்து, ‘மெர்சல்’ படம் சீனாவில் வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் படம் அங்கு வெளியாகுமாம். சீனாவின் பிநிசி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘மெர்சல்’ திரைப்படத்தின் உரிமத்தைப் பெற்றுள்ளது. அது சீன மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தியேட்டர்களில் வெளியிடப்பட உள்ளது.


உலகிலேயே மிகப்பெரிய சினிமா மார்க்கெட்டாக கருதப்படும் சீனாவில், அமீர்கானின் படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் ஈட்டியது, அதுபோல் ‘மெர்சல்’ ஜெயிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ‘பாகுபலி–2’ படமே எதிர்பார்த்ததைவிட மிக சுமாரான வசூலை மட்டுமே அங்கு பெற்றது.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்தான் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர்–1 நடிகர். இவர் ‘செட் செய்யும் ‘பாக்ஸ் ஆபீஸ்’ வசூலைத்தான் இன்றும் பல நடிகர்கள் துரத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் என்றால் கபாலி, எந்திரன் ஆகிய 2 படங்களும் தான். இந்த படங்கள் ரூ.280 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தன. இதற்கு அடுத்த இடத்தில், ‘மெர்சல்’ ரூ.254 கோடி வசூல் செய்துள்ளது.

தற்போது, ‘மெர்சல்’ சீனாவில் ‘ரிலீஸ்’ ஆவதையும், அந்த படம் சீனாவில் எத்தனை கோடி வசூல் செய்யும்? என்பதையும் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய்?
முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய் நடிக்க உள்ளாரா என தகவல் வெளியாகி உள்ளது.
2. புகைப்பிடிக்கும் காட்சி : கேரளாவில் விஜய் மீது வழக்கு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது.
3. ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது
விஜய்யின் சர்கார் படம் எதிர்ப்பை மீறி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
4. அதிமுக போராட்டம்: சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம்
அதிமுகவினர் போராட்டம் நடத்தும் நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
5. 3-வது முறையாக விஜய்-அட்லீ!
அட்லீ இதுவரை, ராஜாராணி, தெறி, மெர்சல் ஆகிய 3 படங்களை டைரக்டு செய்திருக்கிறார்.