சினிமா செய்திகள்

நயன்தாரா சம்பளம் ரூ.4 கோடி + "||" + Nayanthara salary is Rs 4 crore

நயன்தாரா சம்பளம் ரூ.4 கோடி

நயன்தாரா சம்பளம் ரூ.4 கோடி
நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாரா படங்கள் பெரிய கதாநாயகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவிக்கின்றன. இதனால் கதாநாயகர்கள் இல்லாத கதைகளை அவருக்காகவே தயார் செய்து கால்ஷீட் கேட்டு இயக்குனர்கள் மொய்க்கிறார்கள். கடந்த வருடம் வெளிவந்த அறம் படத்துக்கு பிறகு நயன்தாராவின் மார்க்கெட் மேலும் உயர்ந்து இருக்கிறது. 

கோலமாவு கோகிலா படத்தையும் கதாநாயகன் இல்லாமல் நயன்தாராவை முதன்மை படுத்தியே எடுத்து திரைக்கு கொண்டு வருகிறார்கள். விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு அதிகாலை 6 மணிக்கு ரசிகர்களுக்காக பிரத்யேகமாக சிறப்பு காட்சிகள் திரையிடுவதுபோல் கோலமாவு கோகிலா படத்துக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடுகிறார்கள்.  தமிழ் திரையுலக வரலாற்றில் நடிகையை முதன்மைப்படுத்திய எந்த படத்துக்கும் இதுபோல் சிறப்பு காட்சிகள் திரையிட்டது இல்லை என்கின்றனர். தற்போது நடித்து வரும் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் படங்களிலும் அவர் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். 

அஜித்குமார் ஜோடியாக விஸ்வாசம் படத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். இப்போது சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் புதிய படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த நிலையில் இதுவரை ரூ.3 கோடி வாங்கி வந்த நயன்தாரா இப்போது தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பட உலகில் இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இல்லை என்கின்றனர்.