இயக்குநர் வினோத் இயக்கத்தில் அமிதாபச்சன் வேடத்தில் நடிக்கும் நடிகர் அஜித்


இயக்குநர் வினோத் இயக்கத்தில் அமிதாபச்சன் வேடத்தில் நடிக்கும் நடிகர் அஜித்
x
தினத்தந்தி 16 Aug 2018 9:19 AM GMT (Updated: 16 Aug 2018 9:19 AM GMT)

நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தை அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார். மேலும் அஜித்தை வைத்து இயக்குநர் வினோத் இயக்கும் படம் இந்தி ரீமேக்காக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி இந்தியில் கடந்த 2016 - ம் ஆண்டு வெளியான பிங்க் படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பிங்க் படத்தில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பலரும் பாராட்டியிருந்தனர். தமிழில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளார். இச்செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Next Story