சினிமா செய்திகள்

கேரளா வெள்ளத்துக்கு உதவி: ரசிகரின் கேள்விக்கு காஜல் அகர்வால் பதிலடி + "||" + Kajal Agarwal replies to the fan's question

கேரளா வெள்ளத்துக்கு உதவி: ரசிகரின் கேள்விக்கு காஜல் அகர்வால் பதிலடி

கேரளா வெள்ளத்துக்கு உதவி:
ரசிகரின் கேள்விக்கு காஜல் அகர்வால் பதிலடி
டுவிட்டரில் கேள்வி கேட்ட ரசிகருக்கு நடிகை காஜல் அகர்வால் பதிலடி கொடுத்துள்ளார்.
கேரளாவில் பெய்த பேய் மழையால் அந்த மாநிலமே கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஆங்காங்கே வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து கேரளாவில் இன்னலுக்கு ஆளான மக்களுக்கு உதவிகள் குவிந்து வருகின்றன. திரையுலகம் சார்பிலும் ஏராளமானோர் நிதி மற்றும் பொருள் உதவிகள் செய்து வருகின்றனர். 

இந்தநிலையில், நடிகை காஜல் அகர்வாலிடம், டுவிட்டரில் ரசிகர் ஒருவர், ‘கேரளா வெள்ளத்துக்காக நீங்கள் பண உதவி செய்யவில்லையே?’ என்று கிண்டல் செய்து கேள்வி எழுப்பி இருக்கிறார். 

இதற்கு, ‘‘நான் என் கடமையை செய்துவிட்டேன். அதை உங்களிடம் கண்டிப்பாக நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் உதவிக்கு நன்றி’’ என்று பதிலடி கொடுத்து இருக்கிறார். 


தொடர்புடைய செய்திகள்

1. மலைப்பாம்பை துன்புறுத்துவதா? காஜல் அகர்வாலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு
நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட வீடியோவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
2. ‘‘திருமணம் எப்போது?’’ –காஜல் அகர்வால்
திருமணத்துக்கு தயாராகும்போது நிருபர்களை அழைத்து வெளிப்படையாக அறிவிப்பேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறினார்.