சினிமா செய்திகள்

நடிகை ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்லீஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் காலமானார் + "||" + 'English Vinglish' actor Sujata Kumar dies after cancer battle

நடிகை ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்லீஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் காலமானார்

நடிகை ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்லீஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் காலமானார்
நடிகை ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்லீஷ் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்த நடிகை சுஜாதா குமார் நேற்றிரவு காலமானார்.

மும்பை,

நடிகை ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்லீஷ் மற்றும் நடிகர் தனுஷ் நடித்த ராஞ்சனா ஆகிய இந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சுஜாதா குமார்.  இவருக்கு நான்காம் நிலை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால் லீலாவதி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது நிலைமை மோசமடைந்தது.  தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்து விட்டார்.

இதுபற்றி சுஜாதாவின் இளைய சகோதரியான நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நமது அன்பிற்குரிய சுஜாதா குமார் மரணமடைந்து விட்டார்.  அவர் கற்பனைக்கு எட்டாத வெற்றிடத்தினை ஏற்படுத்தி விட்டு நம்மை விட்டு சிறந்த இடத்திற்கு சென்று விட்டார்.

அவர் நேற்றிரவு 11.26 மணிக்கு காலமானார்.  வாழ்ந்த வாழ்க்கை மீண்டும் திரும்பிடாது என்று அதில் தெரிவித்துள்ளார்.  அதன்பின் அவர் மற்றொரு டுவிட்டர் செய்தியில், வில்லே பார்லேவில் ஜுகு பகுதியில் இன்று இறுதி சடங்கு நடைபெறும் என்று செய்தி வெளியிட்டு பின் அதனை நீக்கி விட்டார்.

நடிகை சுஜாதா குமார் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வர்த்தக விளம்பரங்களிலும் நடித்து உள்ளார்.