சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம்ஐரோப்பிய நாடுகளில் அடுத்த கட்ட படப்பிடிப்பு + "||" + Rajinikanth's new film The next stage shooting in European countries

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம்ஐரோப்பிய நாடுகளில் அடுத்த கட்ட படப்பிடிப்பு

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம்ஐரோப்பிய நாடுகளில் அடுத்த கட்ட படப்பிடிப்பு
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை ஐரோப்பிய நாடுகளில் படமாக்க டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார்.
ரஜினிகாந்த், ‘காலா’ படத்தை முடித்த பிறகு இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில், புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

இதுவரை டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. முக்கிய காட்சிகள் சென்னை பின்னி மில் அரங்கில் படமானது. ரஜினிகாந்த்–விஜய் சேதுபதி நடித்த சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. அத்துடன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அடுத்த கட்ட படப்பிடிப்பை லடாக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்க டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் இப்போது நடைபெறுகின்றன.