சினிமா செய்திகள்

நான் கதாநாயகனா? -நடிகர் யோகிபாபு + "||" + Am i a hero? -Active Yogi Babu

நான் கதாநாயகனா? -நடிகர் யோகிபாபு

நான் கதாநாயகனா? -நடிகர் யோகிபாபு
நான் கதாநாயகனா? -நடிகர் யோகிபாபு
நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக மாறும் காலம் இது. வடிவேல், விவேக் ஆகியோர் ஏற்கனவே கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சந்தானமும் கதாநாயகனாகி இருக்கிறார். சூரியும் கதாநாயகனாக நடிக்க தனது உடலை சிக்ஸ் பேக் உடல்கட்டுக்கு மாற்றி இருக்கிறார். அடுத்து யோகிபாபுவும் கதாநாயகனாகப் போகிறார் என்று பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

யோகிபாபு இப்போது நகைச்சுவை ஏரியாவில் கொடி கட்டி பறக்கிறார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதலித்து டூயட் பாடும் காட்சியில் வந்து ரசிகர்களை அதிர வைத்தார். அவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. முன்னணி கதாநாயகர்கள் தங்கள் படங்களில் யோகிபாபு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.

கதாநாயகானாக நடிக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள வீடியோவில் யோகி பாபு கூறும்போது, “எனக்கு கதாநாயகனாக நடிக்கும் ஆசை இல்லை. இறுதிவரை நகைச்சுவை நடிகராகவே நடிப்பேன் சாம்ஆன்டன் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன் என்பது தவறு. அவர் படத்திலும் நகைச்சுவை நடிகராகவே வருகிறேன்” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “சினிமாவில் 6 வருடம் போராடினேன். கலைத்தாய் என்னை இவ்வளவு உயரத்தில் வைத்து இருப்பது மகிழ்ச்சி. சம்பளம் உள்பட பல விஷயங்களில் நான் அனுசரித்துப் போவதால் பட வாய்ப்புகள் வருகிறது. விஜய், அஜித் படங்களை தியேட்டர்களில் காம்பவுன்ட் சுவர் ஏறி குதித்து பார்த்து இருக்கிறேன். இன்று அவர்கள் படங்களில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.