‘கிராபிக்ஸ்’ குதிரைக்கு சான்றிதழ் தர தாமதம் விலங்குகள் நல வாரியம் மீது படக்குழுவினர் புகார்


‘கிராபிக்ஸ்’ குதிரைக்கு சான்றிதழ் தர தாமதம் விலங்குகள் நல வாரியம் மீது படக்குழுவினர் புகார்
x
தினத்தந்தி 18 Sep 2018 1:02 AM GMT (Updated: 18 Sep 2018 1:02 AM GMT)

‘உத்தரவு மகாராஜா’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் உதயா கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபு, நாசர், கோவை சரளா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆசிப் குரைஷி டைரக்டு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

ராஜா காலத்து கதையை மையமாக வைத்து படத்தை எடுத்துள்ளனர். இதனால் படத்தில் குதிரைகள் இடம்பெற்று உள்ளன. குதிரைகளை நிஜ குதிரைகளுக்கு பதிலாக கிராபிக்சில் படமாக்கி உள்ளனர். அவை கிராபிக்ஸ் குதிரைகள்தான் என்று விலங்குகள் நல வாரியத்திடம் சான்றிதழ் பெற அரியானாவில் உள்ள விலங்குகள் நல வாரியத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் எழுத்துப்பூர்வமான சான்றிதழ் வழங்க அந்த வாரியம் தாமதம் செய்வதாக படக்குழுவினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து படத்தின் கதாநாயகன் உதயா கூறும்போது, “விலங்குகள் நல வாரியம் படத்தில் இருப்பது கிராபிக்ஸ் குதிரைகள் என்பதை ஒப்புக்கொண்டு இணையதளத்தில் பதிவு செய்துள்ளது. ஆனால் சான்றிதழ் வழங்க தாமதம் செய்கிறார்கள். அந்த சான்றிதழை வைத்துத்தான் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் பெற முடியும். தமிழ் படங்களுக்கு அரியானாவில் உள்ள விலங்குகள் நல வாரியத்தில் சான்றிதழ் பெரும் நிலை இருப்பது துரதிர்ஷ்டவசமானது. சென்னையில் அந்த அலுவலகத்தை அமைக்க வேண்டும். விலங்குகள் நல வாரியத்தின் தாமதத்தால் படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வரமுடியாத நிலை உள்ளது” என்றார்.

Next Story