சினிமா செய்திகள்

பாலியல் தொல்லைக்கு எதிராக பேசிய கஜோல் + "||" + Kajol speaking against sexual harassment

பாலியல் தொல்லைக்கு எதிராக பேசிய கஜோல்

பாலியல் தொல்லைக்கு எதிராக பேசிய கஜோல்
சினிமா துறையில் பாலியல் தொல்லை இருப்பதாக நடிகைகள் எதிர்ப்பு குரல் கொடுக்க ஆரம்பித்து உள்ளனர்.
 பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களையும் வெளியிடுகிறார்கள். இதனால் செக்ஸ் தொல்லைகள் குறைந்து இருப்பதாக கூறுகின்றனர். இந்த நிலையில் தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி–2 படங்களில் நடித்துள்ள இந்தி திரையுலகின் முன்னணி நடிகை கஜோல் பாலியல் தொல்லைகள் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:–


‘‘பாலியல் தொல்லைகள் சினிமாவில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இருக்கிறது. ஹாலிவுட்டில் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பேசும் ‘மீ டூ’ இயக்கம் இந்தி பட உலகில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் வரவேண்டும். பாலியல் தொல்லை குறித்து சிலர் தைரியமாக பேசுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம்.  சில நடிகைகள் தங்கள் வேலைக்கு பாதிப்பு வரும் என்று இதுபோன்ற தொல்லைகளை பொறுத்துக் கொண்டு இருக்கும் நிலைமை இருக்கிறது. பாலியல் தொல்லைகளை சந்தித்தவர்கள் அதை வெளிப்படுத்த வெட்கப்பட வேண்டியது இல்லை. எனது குழந்தைகளிடம் நான் கண்டிப்பாக இருக்கிறேன். அவர்களிடம் எனது கணவர் அஜய்தேவ்கான் மென்மையாக நடந்து கொள்வார். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சில நேரம் கண்டிப்பாக இருப்பது தேவையானது.’’

இவ்வாறு கஜோல் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. எனக்கு எதிரான மீடூ பாலியல் புகார்கள் ஜோடிக்கப்பட்டது; சட்டப்படி நடவடிக்கை - மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் எச்சரிக்கை
எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது மற்றும் ஜோடிக்கப்பட்டது என மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் கூறியுள்ளார்.
2. ஐகோர்ட்டு நீதிபதி ஆதரவு - நீதித்துறையிலும் பாலியல் தொல்லை இருப்பதாக ஒப்புதல்
நீதித்துறையிலும் பாலியல் தொல்லை இருப்பதாக ஐகோர்ட்டு நீதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
3. கொல்கத்தா: 6 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது
கொல்கத்தாவில் 6 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
4. பாலியல் துஷ்பிரயேகம் தொடர்பாக புகார் கொடுக்க கால நிர்ணயம் கூடாது - மேனகா காந்தி வலியுறுத்தல்
பாலியல் துஷ்பிரயேகம் தொடர்பாக புகார் கொடுக்க கால நிர்ணயம் செய்யக்கூடாது என சட்ட அமைச்சகத்திடம் மேனகா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
5. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் பள்ளி ஊழியர் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-