சினிமா செய்திகள்

பழம்பெரும் திரைப்பட நடிகர் ராஜ் கபூரின் மனைவி மாரடைப்பினால் மரணம் + "||" + Krishna Raj Kapoor dies at 87

பழம்பெரும் திரைப்பட நடிகர் ராஜ் கபூரின் மனைவி மாரடைப்பினால் மரணம்

பழம்பெரும் திரைப்பட நடிகர் ராஜ் கபூரின் மனைவி மாரடைப்பினால் மரணம்
பழம்பெரும் இந்தி நடிகர் ராஜ் கபூரின் மனைவி மாரடைப்பினால் இன்று மரணம் அடைந்து உள்ளார்.
மும்பை,

இந்தி திரையுலகில் புகழ் பெற்ற நடிகர் ராஜ் கபூர்.  இவரது மனைவி கிருஷ்ணா மல்கோத்ரா (வயது 87).  இவர்களது திருமணம் கடந்த 1946ம் ஆண்டு நடந்தது.

இவர்களுக்கு ரந்தீர் கபூர், ரிஷி கபூர் மற்றும் ராஜீவ் கபூர் ஆகிய 3 மகன்களும், ரீத்து மற்றும் ரீமா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை 5 மணியளவில் மாரடைப்பினால் கிருஷ்ணா ராஜ் கபூர் உயிரிழந்து உள்ளார்.  வயது முதிர்வும் மற்றொரு காரணம்.  அவரது மறைவினால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளோம் என ரந்தீர் கபூர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது தெரிவித்துள்ளார்.

அவரது இறுதி சடங்குகள் செம்பூர் பகுதியில் நடைபெறும் என்றும் ரந்தீர் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கடன் பிரச்சினை காரணமாக விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
கடன் பிரச்சினை காரணமாக தனியார் விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் மனைவி உடல் நல குறைவால் காலமானார்
இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் மனைவி உடல் நல குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
3. 75-வது வயதில் மனைவியை விவாகரத்து செய்யும் ஹாலிவுட் நடிகர்
75-வது வயதில், தனது மனைவியை ஹாலிவுட் நடிகர் விவாகரத்து செய்ய உள்ளார்.
4. தொழிலாளி கொலை: மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது
ராணிப்பேட்டை அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. திருமுல்லைவாயலில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
திருமுல்லைவாயலில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.