சினிமா செய்திகள்

சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா? + "||" + Wage arrears issue: Vishal blocked by Vijay Sethupathi movie?

சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?

சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதி–திரிஷா நடித்துள்ள 96 படம் பிரச்சினைகளில் சிக்கி மீண்டு திரைக்கு வந்துள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் ஏற்கனவே விஷால் நடித்த கத்தி சண்டை படத்தை தயாரித்து இருந்தார். அந்த படத்தில் விஷாலுக்கு சம்பள பாக்கி வைத்து இருந்ததாகவும், அதை கொடுத்து விட்டுத்தான் 96 படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று விஷால் முட்டுக்கட்டை போட்டதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.


இந்த பிரச்சினையில் விஜய் சேதுபதி தலையிட்டு 96 படத்துக்காக வாங்கிய ரூ.3 கோடி சம்பளத்தை விட்டுக் கொடுத்தார். அதுவும் கடனை அடைக்க தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு போதவில்லை. இறுதியில் சம்பளம் போக மேலும் ஒரு கோடி ரூபாயை கொடுத்து படம் சிக்கல் இல்லாமல் வெளிவர விஜய் சேதுபதி உதவியதாக தகவல் வெளியானது.

விஜய் சேதுபதி படத்தை தயாரிப்பாளர் சங்க தலைவர் பொறுப்பில் இருக்கும் விஷால் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக விமர்சனங்கள் கிளம்பின. இதற்கு பதில் அளித்து விஷால் தரப்பில் கூறியதாவது:–

‘‘விஷால் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளை சந்தித்து வருகிறார். அந்தமாதிரி ஒரு வலியை விஜய்சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு இரவு முழுக்க அவர் உறங்கவும் இல்லை. ஆகவே, விஜய்சேதுபதி கொடுப்பதாக கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையை அவர் தர வேண்டாம். அதற்கான பொறுப்பை விஷாலே ஏற்றுக்கொள்கிறார்.

நந்தகோபாலுக்கு பைனான்ஸ் மூலம் விஷால் வாங்கிக் கொடுத்த ரூ1.50 கோடி தொகையை அவரிடமே விஷால் பெற்றுக் கொள்வார். அதுவரை அந்த தொகைக்கு விஷால் மீண்டும் வட்டி கட்டுவார். ஆகவே, பைனான்ஸ் வி‌ஷயத்தில் தான் சுமக்கும் வலியை விஜய்சேதுபதி சுமக்க வேண்டாம் என்று விஷால் நினைக்கிறார்.

மேலும், இந்த பிரச்சினையிலிருந்து விஜய்சேதுபதி எந்த வலியும் இல்லாமல் வெளியே வர வேண்டும். பொருளாதார ரீதியாக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தற்போது வெளியாகியுள்ள அவரது படம் வெற்றியடைய வாழ்த்துகளையும் விஷால் தெரிவித்தார்.

இவ்வாறு விஷால் தரப்பில் கூறப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகன்னா-நிவேதா பெத்துராஜ்
விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் ஜோடிகளாக நடிக்கிறார்கள்.
2. சபரிமலைக்கு பெண்கள் செல்வதை ஆதரித்த விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்தன.
3. சர்வதேச பிரச்சினைகளை பேசும் விஜய் சேதுபதியின் புதிய படம்
விஜய் சேதுபதி படத்துக்கு படம் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
4. ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, படத்துக்கு படம் கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்டுகிறார். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஆரஞ்சு மிட்டாய், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா ஆகிய படங்களில் அவரது திறமை வெளிப்பட்டது.
5. ரூ.11 கோடியை இழந்த விஜய் சேதுபதி
இந்த வருடம் 11 கோடி ரூபாயை இழந்து இருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.