உதவி டைரக்டர்களுக்காக நூலகம் டைரக்டர் பா.ரஞ்சித் தொடங்கினார்


உதவி டைரக்டர்களுக்காக நூலகம் டைரக்டர் பா.ரஞ்சித் தொடங்கினார்
x
தினத்தந்தி 6 Oct 2018 11:00 PM GMT (Updated: 6 Oct 2018 5:29 PM GMT)

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களின் டைரக்டர் பா.ரஞ்சித், உதவி டைரக்டர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில், ‘கூகை திரைப்பட இயக்கம்’ என்ற நூலகத்தை தொடங்கி இருக்கிறார்.

சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த நூலகத்தின் தொடக்க விழாவில், குஷ்பு உள்பட திரைப்பட துறையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் குஷ்பு பேசும்போது, ‘‘இந்த நூலகம் உதவி இயக்குனர்களுக்கு மட்டுமல்ல, இயக்குனர்களுக்கும் அவசியமான ஒன்று. என் மகள்களுக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது. புத்தகம் படிப்பது நம்மை தைரியமானவர்களாக உருவாக்கும். யாரையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றலை தரும்’’ என்றார்.

‘‘புத்தகம் மூலம்தான் உலகை அறிய முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். படைப்பாளிகளுக்கு இது உதவும். நான் உதவி டைரக்டராக இருந்தபோது, புத்தகங்களை தேடித்தேடி வாசிப்பேன். அப்போதுதான் நூலகம் திறக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது’’ என்று டைரக்டர் பா.ரஞ்சித் கூறினார்.

Next Story