சினிமா செய்திகள்

‘‘அந்தரங்க வி‌ஷயங்கள் என்ன என்று புரிந்து கொள்வேன்’’-ரகுல் பிரீத்சிங் + "||" + '' Understand what the privacy matters are '' - Rahul Breathe Singh

‘‘அந்தரங்க வி‌ஷயங்கள் என்ன என்று புரிந்து கொள்வேன்’’-ரகுல் பிரீத்சிங்

‘‘அந்தரங்க வி‌ஷயங்கள் என்ன என்று புரிந்து கொள்வேன்’’-ரகுல் பிரீத்சிங்
‘‘ஒருவரை பார்த்ததுமே அவருடைய அந்தரங்க வி‌ஷயங்கள் என்ன என்று புரிந்து கொள்வேன்’’ என்கிறார், ரகுல் பிரீத்சிங்.
தமிழ் சினிமாவின் மூத்த கதாநாயகிகளில் ஒருவரான ரகுல் பிரீத்சிங், தனக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி மேலும் கூறுகிறார்:–

‘‘ஒரு படம் வெற்றி பெறுமா, தோல்வி அடையுமா? என்பது என் கையில் இல்லை. ஆனால், ஒரு படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்துக்கு பெயர் வருமா, வராதா? என்பதை என்னால் தெளிவாக கணிக்க முடியும். ஒருவரிடம் சில நிமிடங்கள் பேசினாலே போதும். அவரின் அந்தரங்க வி‌ஷயங்கள் என்ன என்று புரிந்து கொள்வேன். அப்படிப்பட்ட எனக்கு கதை வலுவானதா, இல்லையா? என்பதை சுலபமாக உணர முடியும்.


நான் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அந்த அனுபவத்தில் சொல்கிறேன். சில சமயம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியில்லை என்றால் நல்ல படங்கள் கூட தோல்வியை தழுவுகின்றன. ஆனால் கதை மற்றும் கதாபாத்திரங்கள் பற்றிய வி‌ஷயத்தில் மட்டும் எனது மதிப்பீடு எப்போதுமே தவறியது இல்லை.

நல்ல கதை என்று நான் நம்பி நடித்த படங்கள், எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளன. கதைகளை தேர்வு செய்வதில், நான் தெளிவாக இருக்கிறேன். ஒரு நடிகையாக எனது பார்வை எப்போதும் நல்ல கதைகள் மீதுதான் இருக்கும். ஆனால், எல்லா நேரத்திலும் நான் எதிர்பார்க்கிற படங்கள் என்னிடம் வருவதில்லை. அதற்காக ஏன் வீட்டில் சும்மா இருக்க வேண்டும்? வர்த்தக ரீதியிலான படங்களில், கதாநாயகனுடன் டூயட் பாடி நடித்து விடுகிறேன்.

இனிமேல் கொஞ்சம் ஓய்வு எடுத்தாவது நல்ல கதைகளில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன்’’

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘‘மீ டூவை தவறாக பயன்படுத்த கூடாது’’ – நடிகை ரகுல் பிரீத்சிங்
தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத்சிங்.
2. “என் கணவர் 6 அடி உயரம் இருக்க வேண்டும்..!”
புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்துள்ளவர் ரகுல் பிரீத்சிங்.