சினிமா செய்திகள்

முதல் தடவையாக 2 வேடங்களில் நயன்தாரா + "||" + Nayantara in 2 roles for the first time

முதல் தடவையாக 2 வேடங்களில் நயன்தாரா

முதல் தடவையாக 2 வேடங்களில் நயன்தாரா
நயன்தாரா முதல் தடவையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
நயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்–1 இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த படங்கள் பெரிய அளவில் வசூல் பார்த்தன. காது கேளாத பெண், கலெக்டர், போதை பொருள் கடத்துபவர், பேய், சி.பி.ஐ. அதிகாரி என்றெல்லாம் படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றுகிறார். 

அடுத்து முதல் தடவையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘ஐரா’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இது நயன்தாராவுக்கு 63–வது படம் ஆகும். கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். சர்ஜன் கே.எம். டைரக்டு செய்துள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். சுதர்சன் சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். 

திகில் படமாக ‘ஐரா’ தயாராகி உள்ளது. இந்த படத்தில் இரட்டை வேடங்களில் வரும் நயன்தாராவின் 2 தோற்றங்களையும் படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். ‘ஐரா’ படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் திரைக்கு வருகிறது.