சினிமா செய்திகள்

பொங்கலுக்கு அஜித்குமார் படம் + "||" + Ajithkumar film for Pongal

பொங்கலுக்கு அஜித்குமார் படம்

பொங்கலுக்கு அஜித்குமார் படம்
பொங்கலுக்கு அஜித்குமார் படம் வெளியாக உள்ளது.

அஜித்குமார் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இது அவருக்கு 59-வது படமாகும். விஸ்வாசம் படப்பிடிப்பை 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கியபோது தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரையுலகினர் போராட்டத்தினால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு தள்ளிப்போனது.

இந்த நிலையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையில் விஸ்வாசம் படம் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த படத்தில் ஒரு பாடல் காட்சி மற்றும் சண்டை காட்சி மட்டுமே பாக்கி உள்ளது.

பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடக்கிறது. இதில் அஜித்குமார், நயன்தாரா பங்கேற்று நடித்து வருகிறார்கள். அதன்பிறகு பின்னி மில்லில் சண்டை காட்சியை படமாக்குகின்றனர். ஓரிரு வாரத்தில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று தெரிகிறது. அதன்பிறகு டப்பிங், ரீரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.

விஸ்வாசம் படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இதில் தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் அஜித்குமார் இரு வேடங்களில் வருகிறார். அவரது தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். தாதா கதையம்சத்தில் படம் உருவாகிறது. வீரம், வேதாளம் படங்களிலும் தாதாவாகவே நடித்து இருந்தார்.தொடர்புடைய செய்திகள்

1. “பொங்கலுக்கு கரும்பு ஏற்றுமதி இருக்காது” தஞ்சை விவசாயிகள் கவலை
“பொங்கலுக்கு கரும்பு ஏற்றுமதி இருக்காது” என்று தஞ்சை விவசாயிகள் கவலையை தெரிவித்துள்ளனர்.
2. ‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசன் ஜோடி காஜல் அகர்வால்?
இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனின் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. சிக்கலில் ‘சர்கார்’ படம்
சிக்கலில் சர்கார் படம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. ‘பைரேட் ஆப் தி கரீபியன்’ படத்தில் இருந்து நடிகர் ஜானி டெப் விலகல்
பைரேட் ஆப் தி கரீபியன் படத்தில் இருந்து நடிகர் ஜானி டெப் விலகினார்.
5. ‘தி வில்லன்’ படம் வெற்றி பெறுவதற்காக ரசிகர்கள் நூதன வேண்டுதல் ஆடுகளை வெட்டி ரத்தத்தை பேனர்களில் தெளித்தனர்
‘தி வில்லன்‘ படம் வெற்றி பெறுவதற்காக நடிகர் சுதீப்பின் ரசிகர்கள் நூதன முறையில் வேண்டுதல் நடத்தினர். அதாவது ஆடுகளை வெட்டி அதன் ரத்தத்தை சுதீப்பின் பேனர்களில் தெளித்தனர்.