சினிமா செய்திகள்

‘வட சென்னை’ படம், இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி + "||" + The film 'North Chennai' was released on the website The crew is shocked

‘வட சென்னை’ படம், இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி

‘வட சென்னை’ படம், இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி
‘வட சென்னை’ படம் வெளியான சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் அது வெளியிடப்பட்டுள்ளது. இதனால் வசூல் பாதிக்கப்படும் என்பதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
‘வட சென்னை’ படம் திரைக்கு வந்த அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தனுஷ் அன்பு கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் படக்குழு அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

‘வட சென்னை’ படம் வெளியான சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் அது வெளியிடப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில் இருந்து பலரும் படத்தை ‘டவுன்லோடு’ செய்துள்ளனர். படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால், ‘டவுன்லோடு’ செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

‘வட சென்னை’ படம் ரூ.65 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. தனுசின் 3 ஆண்டு கால உழைப்பை தமிழ் ராக்கர்ஸ் வீணடித்துள்ளது. படம் ‘ஆன்லைனில்’ கசிந்துள்ளதால், தியேட்டருக்கு செல்வோரின் எண்ணிக்கை குறையும். இதனால் வசூல் பாதிக்கப்படும் என்பதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

புதுப்படங்களை திரைக்கு வந்த சில மணி நேரத்தில், இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது, தமிழ் ராக்கர்ஸ். படத்தை வெளியிடுபவர்கள் விஷாலுக்கு பதில் தமிழ் ராக்கர்சுக்கு கோரிக்கை விடுத்த சம்பவங்களும் நடந்துள்ளது.