சினிமா செய்திகள்

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் நவம்பரில் நடக்கிறது + "||" + Yes Deepika Padukone And Ranveer Singh Are Getting Married In November

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் நவம்பரில் நடக்கிறது

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் நவம்பரில் நடக்கிறது
பாலிவுட் திரை நட்சத்திரங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமணம் நவம்பரில் நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் விழாக்களுக்கு ஒன்றாக வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். பத்மாவத் படத்துக்குப் பின்னர் அவர்களுடைய நெருக்கம் அதிகமாகிவிட்டது என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே இவ்வாண்டு இறுதிக்கு இருவரும் திருமணம் செய்துக்கொள்ளலாம் எனவும் தகவல்கள் வெளியாகியது. இருவீட்டாரும் திருமண வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இப்போது இருவர் தரப்பிலும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமணம் நவம்பரில் நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். திருமண அழைப்பிதழ் வடிவில் அவர் வெளியிட்டுள்ள தகவலில் ‘எங்கள் குடும்பாத்தாருடன் ஆசிகளுடன் எங்கள் திருமணம் நவம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இத்தனை காலமாக எங்கள்மீது நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த வாழ்க்கை தொடங்கப்போகும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்’ என கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்; அடுத்த மாதம் நடக்கிறது
நடிகை தீபிகா படுகோனே - நடிகர் ரன்வீர் சிங் திருமணம் அடுத்த மாதம் நடக்க உள்ளது.
2. திராவகம் வீசப்பட்ட பெண்ணின் கதையில் தீபிகா படுகோனே
டெல்லியில் 2005–ம் ஆண்டு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த லட்சுமி அகர்வால் என்ற பெண் மீது திராவகம் வீசப்பட்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
3. தீபிகா படுகோனே திருமணம் தள்ளிவைப்பு
‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
4. மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமே‌ஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
5. நவம்பர் 20–ந் தேதி தீபிகா படுகோனேவுக்கு திருமணம்?
தீபிகா படுகோனே-இந்தி நடிகர் ரன்வீர் சிங் திருமணம் நவம்பர் 20–ந் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.