சினிமா செய்திகள்

மீ டூ விவகாரம்: தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள் -ஏ.ஆர்.ரஹ்மான் + "||" + A.R.Rahman support METOO

மீ டூ விவகாரம்: தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள் -ஏ.ஆர்.ரஹ்மான்

மீ டூ   விவகாரம்: தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள் -ஏ.ஆர்.ரஹ்மான்
மீ டூ விவகாரத்தில் தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறி உள்ளார்.
சென்னை

சமீபத்தில் ஏ. ஆர். ரஹ்மானின் சகோதரி ரைஹானா மீ டூ பற்றி கருத்து தெரிவித்தார். வைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவரை பற்றி பல பெண்கள் என்னிடம் வந்து புகார் தெரிவித்துள்ளனர் என்றார். இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

மீ டூ இயக்கத்தை கவனித்து வருகிறேன். தொல்லை கொடுத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று சில பெயர்கள் எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. நம் துறை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாறுவதை பார்க்க விரும்புகிறேன். தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள். அனைவரும் பாதுகாப்புடன் பணியாற்றும் சூழலை நானும், என் அணியும் உருவாக்கி வருகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் பேச சமூக வலைதளங்கள் சுதந்திரம் அளிக்கிறது. ஆனால் அதை தவறாக பயன்படுத்திவிடாமல் இருக்க வேண்டும் என்று  கூறி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ‘மீ டூ’ விவகாரத்தில் மோதல்? - சவுகார் ஜானகிக்கு சின்மயி பதில்
மீ டூ விவகாரம் தொடர்பாக, சவுகார் ஜானகிக்கு சின்மயி பதில் அளித்துள்ளார்.
2. ‘மீ டூ’ விவகாரம்: முன்னாள் இந்திய அழகி பாலியல் குற்றச்சாட்டு
மீ டூ விவகாரம் தொடர்பாக, முன்னாள் இந்திய அழகி பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.
3. மீ டூ விவகாரம்: ஆண்களை துன்புறுத்தும் பெண்களுக்கு தண்டனை - சோனாக்சி சின்ஹா
மீ டூ விவகாரத்தில், ஆண்களை துன்புறுத்தும் பெண்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என சோனாக்சி சின்ஹா கூறியுள்ளார்.
4. மீடு விவகாரம்: நாங்கள் ஆதாரங்களை வெளியிட்டு விடுவோம் எனக் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள் - சொர்ணமால்யா
மீ டூ விவகாரத்தில் நாங்கள் ஆதாரங்களை வெளியிட்டு விடுவோம் எனக் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள். எங்களிடம் ஆதாரங்கள் இருக்கிறது. ஆனால் வெளியிடமாட்டோம் என சொர்ணமால்யா கூறி உள்ளார்.
5. மீ டூ விவகாரம் : பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 2 பாதியார்கள் மீது மேகாலயா பெண் குற்றச்சாட்டு
பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 2 பாதியார்கள் மீது மீ டூ இயக்கம் மூலம் மேகாலயா பெண் குற்றம்சாட்டி உள்ளார்.