சினிமா செய்திகள்

நம்பிநாராயணன் வாழ்க்கை கதை:மாதவன் படத்தை எதிர்த்து வழக்கு? + "||" + Court case against Madhavan

நம்பிநாராயணன் வாழ்க்கை கதை:மாதவன் படத்தை எதிர்த்து வழக்கு?

நம்பிநாராயணன் வாழ்க்கை கதை:மாதவன் படத்தை எதிர்த்து வழக்கு?
நம்பிநாராயணன் வாழ்க்கை கதையை படமாக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த படத்துக்கு இப்போது சிக்கல் உருவாகி உள்ளது.
பிரபல இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், ரகசியங்களை விற்றதாக கைதாகி சிறையில் இருந்தார். அதன்பிறகு அவர் குற்றவாளி இல்லை என்று விடுவிக்கப்பட்டார். நம்பிநாராயணனுக்கு நஷ்ட ஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் நம்பிநாராயணன் வாழ்க்கை கதையை படமாக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. 

அவரது வேடத்தில் மாதவன் நடிப்பதாக அறிவித்து உள்ளனர். ஆனால். இந்த படத்துக்கு இப்போது சிக்கல் உருவாகி உள்ளது. ஏற்கனவே 1995–ம் ஆண்டு நம்பி நாராயணன் வாழ்க்கை கதையை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் உரிமை வாங்கி  டி.வி தொடராக தயாரித்து உள்ளார். இந்த தொடர் சட்ட சிக்கலால் ஒளிபரப்பாகவில்லை. 

இப்போது நம்பி நாராயணன் வாழ்க்கை கதையை படமாக்கும் உரிமையை வேறு ஒருவருக்கு விற்று இருப்பதற்கு எஸ்.எஸ்.குமரன் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் கூறும்போது ‘‘நம்பி நாராயணன் எனது உறவினர். அவரது வாழ்க்கை கதையை பல லட்சங்கள் கடன் வாங்கி செலவிட்டு டி.வி தொடராக எடுத்தேன். ஆனால் அதை ஒளிபரப்ப முடியவில்லை. இப்போது உரிமையை வேறு ஒருவருக்கு வழங்கி இருப்பதாகவும் மாதவன் அதில் நடிப்பதாகவும் தகவல். இது சட்டப்படி குற்றமாகும். எனது அனுமதி இல்லாமல் நம்பி நாராயணன் வாழ்க்கை கதையை படமாக எடுக்க கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்து இருக்கிறேன். கோர்ட்டில் வழக்கு தொடரவும் திட்டமிட்டு உள்ளேன்’’ என்றார்.