சினிமா செய்திகள்

போக்குவரத்துக்கு இடையூறு; நடிகை ரவீணா தாண்டன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு + "||" + Court directs police to lodge FIR against Bollywood actor Raveena Tandon, 2 others

போக்குவரத்துக்கு இடையூறு; நடிகை ரவீணா தாண்டன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்துக்கு இடையூறு; நடிகை ரவீணா தாண்டன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய இந்தி திரைப்பட நடிகை ரவீணா தாண்டன் மற்றும் 2 பேருக்கு எதிராக போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முசாபர்பூர்,

இந்தி திரைப்பட உலகில் புகழ் பெற்ற நடிகை ரவீணா தாண்டன்.  இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

பீகாரில் கடந்த அக்டோபர் 12ந்தேதி ஓட்டல் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ள ரவீணா சென்றுள்ளார்.  இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.  இதில் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ரவீணா ஓட்டல் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதனால் போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.  இதில் நான் சிக்கி கொண்டேன். 

ஓட்டல் உரிமையாளர்களான தந்தை மற்றும் மகனான பிரணவ் குமார் மற்றும் உமேஷ் சிங் இவர்களுடன் நடிகை ரவீணா ஆகிய 3 பேருக்கு எதிராக பிரிவு 156(3)ன் கீழ் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவிட உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.

இதனை அடுத்து நடிகை ரவீணா மற்றும் 2 பேர் மீது முசாபர்பூர் நகர போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய நீதிபதி தீபக் குமார் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மோசடி எதுவும் இல்லை, ”நடைபெற்றது சிவில் பரிவர்த்தனையே”: நீதிமன்றத்தில் நிரவ் மோடி பதில்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் தான் மோசடி எதுவும் செய்யவில்லை என்று நிரவ் மோடி நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
2. குடியரசு தலைவரின் பாதுகாவலர் பணிக்கு சாதி அடிப்படையில் நியமனம்; மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
குடியரசு தலைவரின் பாதுகாவலர் பணியில் சாதி அடிப்படையில் நியமனம் செய்வதற்கு எதிரான மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
3. ரேசன் கடைகளில் கண்காணிப்பு கேமரா; 2 வாரங்களில் அரசுக்கு பரிந்துரை அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
ரேசன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து 2 வாரங்களில் அரசுக்கு பரிந்துரை அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
4. கரூர், குளித்தலையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 648 வழக்குகளுக்கு சமரச தீர்வு
கரூர், குளித்தலையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 648 வழக்கு களுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
5. கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் 8-ந்தேதி நடக்கிறது
வழக்குகளுக்கு சமசர தீர்வு காணும் பொருட்டு கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.