சினிமா செய்திகள்

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு ரூ.65 லட்சம் தீபாவளி பரிசு + "||" + Diwali gift to Rs 65 lakh for the weaker producers

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு ரூ.65 லட்சம் தீபாவளி பரிசு

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு ரூ.65 லட்சம் தீபாவளி பரிசு
நடிகர் சங்கம் சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக வேட்டி, சேலைகள் சமீபத்தில் வழங்கப்பட்டன.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்பட்டது. இதுபோல் முன்னணி நடிகைகள் துணை நடிகர்–நடிகைகளுக்கும் வழங்கப்பட்டன.

வெளியூர்களில் உள்ள நாடக நடிகர், நடிகைகளுக்கும் அங்குள்ள நடிகர் சங்க பிரதிநிதிகள் மூலம் விநியோகிக்கப்பட்டது. இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளன. சங்கத்தில் உள்ள நலிந்த தயாரிப்பாளர்களை கணக்கெடுத்தனர்.


650 தயாரிப்பாளர்கள் அந்த பட்டியலில் இருந்தார்கள். 650 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டன. மொத்தம் ரூ.65 லட்சம் தீபாவளி பரிசாக வழங்கி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இணையதளத்தில் வெளியான 3 படங்கள் : படக்குழுவினர் அதிர்ச்சி
தமிழ் திரையுலகில் திருட்டு வி.சி.டி.யை தொடர்ந்து, தற்போது புதிய படங்களை வெளியிடும் திருட்டு இணைய தளங்களின் நடவடிக்கை பெரிய தலைவலியாக உள்ளன.