சினிமா செய்திகள்

அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்; நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து + "||" + Good wishes to all on Diwali; Actor Rajinikanth congratulates

அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்; நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்; நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் முன் குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமுடன் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொதுமக்களுக்கு தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

தீபாவளியையொட்டி பொதுமக்கள் குளித்து, பூஜை செய்து, புது ஆடைகளை உடுத்தி, தயார் செய்த பலகாரங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து அளித்து உண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தின் இல்லம் அமைந்துள்ள சென்னை போயஸ் கார்டனில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.  இதனை அறிந்து நடிகர் ரஜினிகாந்த் சட்டை, வேட்டி அணிந்தபடி வீட்டில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள் என அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்து கொண்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பதில் அளித்து உள்ளார்.
2. சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு நாராயணசாமி வாழ்த்து
சபாநாயகர் வைத்திலிங்கத்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்தார்.
3. புஸ்சி ஆனந்து இல்ல திருமண வரவேற்பு விழா: நடிகர் விஜய் நேரில் வாழ்த்து
அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்து– அர்லின் உமா ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
4. அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் விழா: ராகுல்காந்தி வாழ்த்து
அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி செல்போன் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
5. ‘‘நீதிமன்ற கருணையால் தமிழகத்தில் ஆட்சி தொடருகிறது’’ சசிகலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிறகு டி.டி.வி. தினகரன் பேட்டி
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவை நேற்று சந்தித்த டி.டி.வி. தினகரன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.