சினிமா செய்திகள்

குடும்பத்துடன் கோவா சென்ற அஜித் + "||" + Ajith who went to Goa with family

குடும்பத்துடன் கோவா சென்ற அஜித்

குடும்பத்துடன் கோவா சென்ற அஜித்
அஜித்குமார் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.
அஜித் நடிக்கும் அடுத்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிப்பதாகவும், சதுரங்க வேட்டை படத்தை இயக்கி பிரபலமான வினோத் இயக்குகிறார் என்றும் கூறப்பட்டது.  

போனிகபூர் 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்து அஜித்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பட வேலைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய பிங்க் படத்தின் ரீமேக் என்றும், தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதையில் மாற்றம் செய்கின்றனர் என்றும் பேசப்பட்டது. 

ஆனால் இந்த படம் ‘பிங்க்’ ரீமேக் அல்ல என்று வினோத் சமூக வலைத்தள பக்கத்தில் மறுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு விளக்கம் அளித்துள்ள வினோத், ‘‘நான் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்பட எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் இல்லை. எனவே எனது பெயரில் போலியான கணக்குகளில் இருந்து வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்’’ என்று கூறியுள்ளார். 

இந்த நிலையில் விஸ்வாசம் படம் முடிவடைந்த நிலையில் ஓய்வு எடுக்க குடும்பத்துடன் அஜித்குமார் கோவா புறப்பட்டுச் சென்றார். சென்னை திரும்பியதும் போனிகபூர் தயாரிக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. துப்பாக்கி சுடும் போட்டி: அஜித் கலந்து கொண்ட புகைப்படங்கள்
துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் கலந்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.
2. 45வது தமிழ்நாடு ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார்
45வது தமிழ்நாடு ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் நடிகர் அஜித்குமார்.