சினிமா செய்திகள்

ஜோதிகா படம், இணையதளத்தில் வெளியானது ; படக்குழுவினர் அதிர்ச்சி + "||" + Jyothika's film was released on the website; movie Team Shock

ஜோதிகா படம், இணையதளத்தில் வெளியானது ; படக்குழுவினர் அதிர்ச்சி

ஜோதிகா படம், இணையதளத்தில் வெளியானது ; படக்குழுவினர் அதிர்ச்சி
தமிழில் வெளியாகும் புதிய படங்கள் இணையதளங்களிலும் உடனேயே வந்து விடுகின்றன.
சமீபத்தில் திரைக்கு வந்த ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விஷால், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் அனைத்து படங்களும் இணையதளத்தில் வெளியானது. இதனால் வசூல் பாதிக்கப்பட்டன.

இதை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முன் எச்சரிக்கை எடுத்தது. தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் ஏற்பாடு செய்தது. அதையும் மீறி இப்போது ஜோதிகா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த காற்றின் மொழி படமும் இணையதளத்தில் வெளியாகி விட்டது. படக்குழுவினர் கோர்ட்டுக்கு சென்று இணையதளத்தில் படம் வெளியாவதற்கு தடை பெற்று இருந்தனர்.


ஆனாலும் திருட்டுத்தனமாக வெளியிட்டு விட்டனர். படத்தை பலரும் பதிவிறக்கம் செய்து பார்த்து வருகிறார்கள். இதனால் வசூல் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டது. ஜோதிகா நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்தன.

இதனால் படம் நல்ல வசூல் பார்க்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இணையதளத்தில் வெளியாகி விட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். படக்குழுவினர் சார்பில் தியேட்டர்களில் படத்தை செல்போனிலும் கேமராவிலும் படம்பிடிப்பதை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சில தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தி இருந்தனர். ஆனாலும் பலன் இல்லாமல் போனது.

தொடர்புடைய செய்திகள்

1. திரைக்கு வரும் கார்த்தி, ஜோதிகா படங்கள்
ஜோதிகா ‘ராட்சசி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஜ் இயக்குகிறார். சத்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் உள்ளனர்.
2. ஆசிரியை வேடத்தில்...
ஜோதிகா நடித்து வந்த ஒரு புதிய படத்தை கவுதம் ராஜ் டைரக்டு செய்து வந்தார்.
3. மீண்டும் போலீஸ் அதிகாரியாக ஜோதிகா
ஜோதிகா திருமணத்துக்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். அந்த படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து படங்கள் குவிந்தன.
4. ஜோதிகா நடித்த நகைச்சுவை படம்
நகைச்சுவை படம் ஒன்றில் ஜோதிகா நடித்துள்ளார்.